MMDAயில் எத்தகைய திருத்தத்துக்கும் யாரும் முயற்சிக்க கூடாது
Posted by aljazeeralanka.com on November 04, 2024 in | Comments : 0
முஸ்லிம் திருமண சட்டத்தில் எத்தகைய திருத்தமும் தேவையில்லை என்பதே உலமா கட்சியின் தொடர் நிலைப்பாடாகும்.
இச்சட்டத்தில் குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் நேரடியாக முரண்படும் எச்சட்டமும் இல்லாத நிலையில் அதில் திருத்தம் தேவையே இல்லை.
அவ்வாறு திருத்தினால் அதில் பிழை உள்ளது என நாமே ஏற்றுக்கொண்டதாக ஆகும். அப்படியாயின் பிழையான திருமண சட்டத்தின்படியா நீங்கள் திருமணம் முடித்தீர்கள்?
அப்படியாயின் நமது மூதாதையர் பிழையான திருமண சட்டத்தின் படி கல்யாணம் செய்து ஹராமாக பிள்ளைகள் பெற்றார்களா?
முஸ்லிம் புத்திஜீவிகள், உலமாக்களிடம் கேட்டு திருத்துவோம் என்ற கூற்றையும் நாம் மறுக்கிறோம். இத்தகைய புத்திஜீவிகளில் பலர் ஐரோப்பியரால் மூளைச்சலவை செய்யப்பட்டோரும், பணத்துக்காக விலை போவோரும் உள்ளனர். உலமாக்களிலும் அரைகுறையாக படித்து விட்டு காக்காய் பிடித்தல் மூலம் உலமா சபை நிர்வாகத்தில் இடம் பிடிப்போரும் உண்டு. அத்தகையவர்களை அரசாங்கங்கள் பணம், பதவியால் விலைக்கு வாங்கிவிடுவர்.
MMDAயில் எத்தகைய திருத்தத்துக்கும் யாரும் முயற்சிக்க கூடாது. அவ்வாறு முயற்சித்த கடந்த ஜனாதிபதிகள், நீதி அமைச்சர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டார்கள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
ஆகவே திருமண சட்டத்தில் திருத்தம் செய்வதை விடுத்து காதிமாருக்கு நல்ல வேதனம் கொடுங்கள். அவருக்கு உதவியாக பெண் ஜூரிமாரை நியமியுங்கள். காதி நீதிமன்றுக்கு தனியான கட்டிடங்கள் கட்டிக் கொடுங்கள்.
முபாறக் முப்தி.
உலமா கட்சி.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment