முஸ்லிம்கள் மத்தியில் சிறுவர் திருமணம்?
Posted by aljazeeralanka.com on February 16, 2025 in | Comments : 0
இலங்கையில் சிறுவர் திருமணம் தொடர்பாக எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு கடந்த 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்டது.
அதன்பிரகாரம் ஆகக்கூடுதலான சிறுவர் திருமணங்கள் சிங்கள மக்கள் மத்தியிலேயே நடைபெறுகின்றன.
இரண்டாவதாக தமிழ் மக்கள் மத்தியில் நடைபெறும் சிறுவர் திருமணங்களில் 90 வீதமானவை நமது மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக சகோதரிகள் மத்தியில் நடைபெறுகின்றது.
அதன் பின்னரே முஸ்லிம்கள் மத்தியில் நடைபெறும் சிறுவர் திருமணங்களின் எண்ணிக்கை வருகின்றது.
ஆக..அனைத்துச் சமூகங்களிலும் சிறுவர் திருமணங்கள் நடைபெறும் நிலையில், முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து அமைச்சர் சரோஜா சாவித்திரி கருத்து வௌியிடுவது ஏன்?
அவ்வாறு உண்மையிலேயே சிறுவர் திருமணங்கள் நடைபெறுவதை முற்றாக தடுக்க வேண்டுமெனில் கண்டிய திருமண சட்டத்தில் முதலில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
அதற்கு அடுத்ததாக மலையக சகோதரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்களை விட்டு, மூன்றாவது இடத்தில் இருப்பவர்களை நோக்கி மூர்க்கத்தனமாக விரல் நீட்டும் காரணம் என்ன சரோஜா சாவித்திரி?
அஷ்ரப் அலி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment