BREAKING NEWS

முஸ்லிம் அமைச்ச‌ர் நிய‌மிக்க‌ப்ப‌டுவ‌தாயின் ச‌மூக‌ம் என்ன‌ செய்ய‌ வேண்டும்?

முத‌லில் ஹ‌க்கீம், இம்ரான் ம‌ஃரூப், nppக்கு ஆத‌ர‌வ‌ளிக்காத‌ முஸ்லிம்க‌ள் போன்றோர் இது ப‌ற்றி பேசுவ‌தை நிறுத்த‌ வேண்டும். இவ‌ர்க‌ள் சொல்லித்தான் முஸ்லிம் அமைச்ச‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார் என்ற‌ ப‌ழிச்சொல் அர‌சின் மீது விழும் என்ப‌தால் அமைச்சு வ‌ழ‌ங்க‌மாட்டார்க‌ள். இத‌னால்த்தான் முஸ்லிம் அமைச்ச‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட்டு விட‌க்கூட்டாது என்ற‌ ந‌ரித்த‌ந்திர‌த்தில்தான் இவ‌ர்க‌ள் முஸ்லிம் அமைச்ச‌ர் வேண்டும் என‌ ஒப்பாரி வைக்கிறார்க‌ள். ஜ‌க்கீம் அமைச்ச‌ராக‌ இருந்து இந்த‌ ச‌மூக‌த்துக்கு என்ன‌த்த‌ கிழித்தார்? ச‌மூக‌த்தின் கௌர‌வ‌த்தை இல்லாம‌ல் செய்தார், த‌ன் குடும்ப‌த்துக்கும் த‌ன் வால்க‌ள் சில‌ருக்கும் ப‌த‌விக‌ள் கொடுத்தார். ஆக‌வே இந்த‌ அர‌சு முஸ்லிம் அமைச்சு கொடுக்க‌ வேண்டுமாயின் அனைத்து எதிர்க்க‌ட்சிக‌ளும் ஒன்றிணைந்து பின் வ‌ருமாறு சொல்ல‌ வேண்டும். " முஸ்லிம் அமைச்ச‌ர் ஒருவ‌ர் நிய‌மிக்க‌ப்ப‌ட‌ கூடாது. npp அர‌சில் த‌குதியான‌ எம்பீக்க‌ள் எவ‌ரும் இல்லை என்ப‌தால் யாருக்கும் அமைச்சு ப‌த‌வி கொடுக்க‌ கூடாது. அது போல் ஹ‌க்கீம், ரிசாத் போன்றோரை விலைக்கு வாங்கி அவ‌ர்க‌ளையும் அமைச்ச‌ர்க‌ளாக‌ நிய‌மிக்க‌ கூடாது" இவ்வாறு சொல்ல‌ முடியுமா? எதிர்க்க‌ட்சிக‌ள் சொன்னால் மாற்ற‌மாக‌ அர‌சு ந‌ட‌க்கும். அதுதான் அர‌சிய‌ல். முபாற‌க் முப்தி ஐக்கிய‌ காங்கிர‌ஸ். உல‌மா க‌ட்சி. 8.2.2025

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar