அவமானத்துக்குரிய முஸ்லிம் அமைச்சர், முஸ்லிம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம்
Posted by aljazeeralanka.com on February 16, 2025 in | Comments : 0
நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து எந்தவொரு முஸ்லிமுக்கும் கிடைக்காத அளவு பல அமைச்சுக்கள் கிடைத்தும் சமூகத்தின் உரிமைகளை பெற்றுக்கொடுக்காத ஒரேயொரு அவமானத்துக்குரிய முஸ்லிம் அமைச்சர், முஸ்லிம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் மட்டும்தான் என ஐக்கிய காங்கிரஸ், அகில இலங்கை உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் முப்தி தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமை சமூகத்துக்கு அவமானம் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பற்றி கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து யாராவது ஒன்று அல்லது இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர். அவர்களில் பதியுதீன் மஃமூத், எம் எச் முஹம்மத், எம் எச் எம் அஷ்ரப் போன்றோர் தம் சமூகத்துக்கு சேவை செய்துள்ளனர்.
ஆனால் இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளில் அதிக அதிகாரம் கிடைத்தும் சமூக நலன் பார்க்காத ஒருவர் என்றே வரலாறு ஹக்கீமை கூறும்.
தலைவர் அஷ்ரப் கூட ஆறு வருடம்தான் அமைச்சராக இருந்தார். அந்த அமைச்சின் மூலம் நாட்டுக்கும் சமூகத்துக்கும் சாதித்தார்.
அஷ்ரபுக்கு கிடைக்காத பல அமைச்சுக்கள், பதவிகள் ஹக்கீமுக்கு கிடைத்தன.
அவற்றில் அஷ்ரப் வகித்த துறைமுக அமைச்சு, முஸ்லிம் சமய கலாசார அமைச்சு, நீதி அமைச்சு, நீர் வழங்கல் அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு என பல.
இத்தனை அமைச்சுக்கள் கிடைத்தும் அவற்றின் மூலம் சமூகத்துக்கு, சொல்லத்தக்க எந்த நன்மையும் செய்யாத, செய்யத்தெரியாத ஒரேயொரு முட்டாள் அரசியல் கட்சித்தலைவர் ரவூப் ஹக்கீம்தான்.
அது மட்டுமின்றி ரவூப் ஹக்கீம் அமைச்சராக இருக்கும் காலங்களில்தான்முஸ்லிம் சமூகத்துக்கெதிரான கலவரங்களும், தாக்குதல்களும், சட்டங்களும் நிறை வேறின.
இவற்றின் கரணமாகவே தற்போது முஸ்லிம் அமைச்சு இல்லாமையை நாம் நல்ல விடயமாக பார்க்கிறோம். எதிர்காலத்தில் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவர் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்றோராக இருக்க கூடாது என்பதையும் சொல்கின்றோம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment