ரிசாத் பதியுதீன் கட்சி தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு
Posted by aljazeeralanka.com on June 17, 2025 in | Comments : 0
நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களில் எங்களுடைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கட்சியான தேசிய மக்கள் சக்திக்கு தனது கட்சி உறுப்பினர்கள் மூலம் பூரண ஆதரவு கொடுத்து ஆட்சி பீடத்தை பெற்றுக் கொடுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் அப்துல் ரிஷாட் பதிதியுதீன் அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சியான மக்கள் காங்கிரஸ் அரச கட்சிக்கு ஆதரவளித்தமை ரிசாத் பதியுதீன் சஜித்தின் கட்சியை ஓரங்கட்டுகிறார் என தெரிகிறது.
அஷ்ஷேய்க் சதீக் (முப்தி)
பொதுச் செயலாளர் ஐக்கிய காங்கிரஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment