BREAKING NEWS

முஸ்லிம்ளின் குருக்கள் மடம் புதை குழி

முஸ்லிம்ளின் குருக்கள் மடம் புதை குழி குறித்து 2022ம் ஆண்டு பிபிசியில் வெளிவந்த கட்டுரை ।।।। கட்டுரை தகவல் எழுதியவர்,யூ.எல்.மப்றூக் பதவி,பிபிசி தமிழுக்காக 17 நவம்பர் 2022 விடுதலைப் புலிகள் கொன்றதாக கூறப்படும் 170 முஸ்லிம்கள் உடல்களை தோண்டி மத முறைப்படி அடக்கம் செய்யக் கோரிக்கை. படக்குறிப்பு, சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி, படுகொலை செய்து, அங்கேயே புதைக்கப்பட்ட சுமார் 170 முஸ்லிம்களின் உடல்களையும் தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் 'காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்' இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. மேற்படி ஆணைக்குழு முன்பாக - காத்தான்குடி பள்ளிவாயில்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். ரஊப் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளார். 1990ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் தேதி - கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் பொதுமக்களை - தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், ஆயுதமுனையில் கடத்திப் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கொலை செய்யப்பட்ட அனைவரும் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டம் சேர்ந்தவர்களாவர். ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டுத் திரும்பியோர், தொழிலுக்காக வெளியூர் சென்று வந்தோர் உட்பட பலர் - இதன்போது கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களையே, தோண்டியெடுத்து, இஸ்லாமிய முறைப்படி மீளவும் அடக்கம் செய்வதற்கு சிபாரிசு செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம் படக்குறிப்பு,முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம காட்டிய இடம் மூன்று கோரிக்கைகள் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் மூன்று கோரிக்கைகளை தாம் முன்வைத்துள்ளதாக ரஊப் குறிப்பிட்டார். குருக்கள் மடத்தில் 170 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டு, அந்த உடல்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும். அந்தப் படுகொலை ஏன் மேற்கொள்ளப்பட்டது என்பதை சுயாதீன ஆணைக்குழு ஒன்றின் மூலம் ஆராய்ந்து கண்டறிய வேண்டும். குருக்கள் மடம் படுகொலை நடந்த காலப்பகுதியில், அநேகமான தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்தது. ராணுவத்தினர் தலைகாட்டும் போது மறைந்துகொள்ளும் புலிகள் இயக்கத்தவர்கள், ராணுவம் சென்ற பின்னர் ஊர்களுக்குள் மீண்டும் நடமாடத் தொடங்குவர். சிலவேளைகளில், புலிகள் அமைப்பினரைக் கட்டுப்படுத்துவதற்காக படையினர் களமிறங்கும்போது, இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் மோதல்கள் இடம்பெறுவதுமுண்டு. இந்தக் காலப்பகுதியில் தமிழர் - முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லுறவு காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் என்பதற்காகவே தனது சகோதரர்கள் இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டனர் என்கிறார் பௌசுல் ஹினாயா. குருக்கள் மடத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் தோண்டப்பட்டு இஸ்லாமிய முறைப்படை நல்லடக்கம் செய்யப்படுவது - தமக்கு திருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறுகின்றார். புலிகள் கடத்தியதை கண்டவர் தகவல் கூறினார் சம்மாந்துறையில் தையற்கடை நடத்தி வந்த ஹபீபுர் றஹ்மான் எனும் தமது குடும்பத்தின் மூத்த சகோதரர், குருக்கள் மடத்தில் புலிகளால் கடத்திப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகின்றார் நஸீலா. இவர் அரச தொழில் புரிகின்றார். தனது சகோதரர் பயணித்த லாரியை புலிகள் கடத்திச் சென்றதை, அந்த வழியினால் பயணித்த ஒருவர் கண்டு வந்து - தங்களிடம் கூறியதாகவும் நஸீலா இதன்போது குறிப்பிட்டார். முஸ்லிம்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ரஊப் அடையாளம் காட்டிய இடம் 1980களில் இருந்தே முஸ்லிம்கள் காணாமலாக்கப்படுதல், கடத்தப்படுதல், முஸ்லிம்களிடம் கப்பம் கோருதல் போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளதாகவும், இவற்றினை விடுதலைப் புலிகளும், தமிழ் ஆயுதக் குழுக்களுமே செய்து வந்ததாகவும் ரஊப் குறிப்பிடுகின்றார். குருக்கள் மடத்தில் ஒரு இடத்தை இந்த செய்தியாளரிடம் காட்டிய ரஊப், படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் அங்குதான் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கடற்கரையை அண்டிய அந்த இடத்துக்கு அருகில், தற்போது ராணுவ முகாமொன்று அமைந்துள்ளது. தொகுப்பு. முபாற‌க் முப்தி

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar