BREAKING NEWS

நிசாம் காரிய‌ப்ப‌ருக்கு மிக‌ தாம‌த‌மாக‌ புரிந்த‌ இன‌ரீதியான‌ செய‌ல‌க கோரிக்கை.

இன‌ரீதியாக‌ பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் அமைக்க‌ முடியாது என‌ அர‌ச‌ த‌ர‌ப்பில் த‌ன‌க்கு எழுத்து மூல‌ம் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து என‌ முஸ்லிம் காங்கிர‌சின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் நிசாம் காரிய‌ப்ப‌ர் கூறியிருப்ப‌தன் மூல‌ம் அர‌சிய‌ல் சாச‌ண‌த்தில் உள்ள‌ இந்த‌ விட‌ய‌ம் இப்போதுதான் அவ‌ருக்கு தெரியுமா என்ற‌ கேள்வி எழுகிற‌து என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் தெரிவித்துள்ள‌து. "ஐக்கிய‌ காங்கிர‌ஸ்" க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்துள்ள‌தாவ‌து, அண்மையில் ஒலுவிலில் த‌ம்மை ச‌ந்தித்த‌ க‌ல்முனைக்குடி பெரிய‌ ப‌ள்ளிவாய‌ல் த‌லைமையிலான‌ குழுவின‌ருட‌னான‌ ச‌ந்திப்பிலேயே இவ்வாறு நிசாம் காரிய‌ப்ப‌ர் தெரிவித்துள்ளமை விய‌ப்பை த‌ருகிற‌து. இன‌ரீதியாக‌ பிர‌தேச‌ ச‌பைக‌ளோ செய‌ல‌க‌மோ அமைக்க‌ முடியாது என்ப‌தை எம‌து க‌ட்சி அடிக்க‌டி ஊட‌க‌ங்க‌ள் மூல‌மாக‌ சொல்லிவ‌ருகிற‌து. எம‌து எதிர்ப்பின் கார‌ண‌மாக‌ "க‌ல்முனை த‌மிழ் செய‌ல‌க‌ம்" என்று பாவித்த‌ பெய‌ரை பின்ன‌ர் க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என‌ பாவிக்க‌ தொட‌ங்கினார்க‌ள். அது கூட‌ க‌ல்முனை உப‌ செய‌ல‌க‌ம் என்றே பாவிக்க‌ வேண்டும் என்ப‌தை வ‌லியுறுத்தி வ‌ருகிறோம். வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்ப‌து கூட‌ அர‌ச‌ வ‌ர்த்த‌மாணி அறிவித்த‌ல் இன்றி ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌ சொல்ல‌ப்ப‌டுவ‌தாகும். ஆனால் இவ்வாறு த‌மிழ் செய‌ல‌க‌ம், வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என்ப‌ன‌ இல்லை என‌ இன்று வ‌ரை முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ரவூப் ஹ‌க்கீமோ அத‌ன் செய‌லாள‌ர் நிசாம் காரிய‌ப்ப‌ரோ சொன்ன‌தில்லை. க‌ல்முனையில் முஸ்லிம் செய‌ல‌க‌ம் என்ற‌ ஒன்று இல்லை. இருப்ப‌து நூறு வீத‌ம் த‌மிழ் மொழியிலான‌ ஒரேயொரு செய‌ல‌க‌ம்தான். அத‌ற்கு உத‌வியாக‌ உப‌ செய‌ல‌க‌ம் உள்ள‌து. க‌ப்முனையை இன‌ரீதியில் பிரிக்க‌ இட‌ம‌ளிக்க‌ முடியாது. ஆனாலும் நீண்ட‌ கால‌ இந்த‌ அர‌சிய‌ல் பிர‌ச்சினைக்கு என்ன‌ தீர்வு என்ப‌தையாவ‌து முஸ்லிம் காங்கிர‌ஸ், ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் போன்ற‌ க‌ட்சிக‌ள் இன்ன‌மும் முன் வைக்க‌வில்லை. இந்த‌ப்பிர‌ச்சினை தீர்க்க‌ப்ப‌டாம‌ல் இருந்தால் த‌மிழ் முஸ்லிம் முறுக‌ல் தொட‌ர்வ‌துட‌ன் க‌ல்முனை முஸ்லிம்க‌ளை தேர்த‌ல் அடிமையாக‌ வைத்திருக்க‌ முஸ்லிம் காங்கிர‌சும், த‌மிழ் ம‌க்க‌ளை அடிமைப்ப‌டுத்த‌ த‌மிழ் கூட்ட‌மைப்புக்கும் முடியும் என்ப‌தால்தான் இத‌ற்கு தீர்வு காண‌வில்லை. க‌ட‌ந்த‌ ந‌ல்லாட்சியின் ப‌ங்காளிக‌ளாக‌ முஸ்லிம் காங்கிர‌சும் த‌மிழ் கூட்ட‌மைப்பும் இருந்தும் இப்பிர‌ச்சினையை தீர்க்காம‌ல் பேச்சுவார்த்தை அது இது என‌ தேநீர், பிஸ்க‌ட்டுக‌ளை சாப்பிட்டு கால‌த்தை க‌ட‌த்தின‌ர். க‌ல்முனை விட‌ய‌த்தில் இடைக்கிடை கோடீஸ்வ‌ர‌ன் போன்ற‌ த‌மிழ் எம்பிக்க‌ள் பாராளுன‌ன்றில் பேசி உசாராக்குவர். உட‌னே க‌ல்முனையில் உள்ளோர் உஷார் ம‌டைய‌ர்க‌ளாகி முஸ்லிம் எம்பீக்க‌ளை ச‌ந்தித்து போட்டோ போட்டுவிட்டு உற‌ங்கி விடுவ‌ர். முஸ்லிம் காங்கிர‌ஸ் ம‌ன‌ம் வைத்திருந்தால் அத‌ன் த‌லைவ‌ர்க‌ள் கெபின‌ட் அமைச்ச‌ர்க‌ளாக‌ இருக்கும் போதே 1987ம் இணைக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல்முனையை அமைச்சு ப‌த்திர‌த்தின் மூல‌ம் ஒரே இர‌வில் ர‌த்து செய்து அதே எல்லையுட‌ன் கூடிய‌ நான்கு ச‌பைக‌ளை மீண்டும் உருவாக்கியிருக்க‌ முடியும். ஆனால் த‌மிழ் முஸ்லிம் முர‌ண்பாடு இருந்தால்தான் க‌ல்முனையை காப்பாற்ற‌ போகிறோம் என‌ முஸ்லிம் சமூக‌த்தை ஏமாற்றி வாக்கு பெற‌ முடியும் என்ப‌த‌ற்காக‌ இம்முய‌ற்சியை எடுக்க‌வில்லை. ஆக‌வே இப்பிர‌ச்சினைக்கான‌ தீர்வாக‌ எம‌து க‌ட்சி முன் வைத்துள்ள‌, 90 வீத‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் வாழும் பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு பிர‌தேச‌ங்க‌ளை இணைத்து பாண்டிருப்பு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் வ‌ழ‌ங்க‌ முஸ்லிம் காங்கிர‌சும் ம‌க்க‌ள் காங்கிர‌சும் இணைந்து அர‌சிட‌ம் முன்வைக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கேட்டுக்கொள்கிற‌து.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar