பிள்ளையானின் காத்தான்குடியில் துப்பாக்கிதாரி கைது
Posted by aljazeeralanka.com on August 15, 2025 in | Comments : 0
பிள்ளையானின் துப்பாக்கிதாரி என கூறப்படும் ஒருவர் காத்தான்குடியில் கைது.!
பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் செய்ததாகக் கூறப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கிதாரியாகக் கருதப்படும் சந்தேக நபர் முகமட் ஷாகித் என்பவரை மட்டக்களப்பு காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து இன்று(13) மாலை சிஐடி யினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் பிள்ளையானை கொழும்பு - குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் 7ஆம் திகதி சிஐடியினர் கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை சிஐடியினர் இன்று கைது செய்திருந்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்வர் கடந்த 2024- யூன் 17ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெண்ணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்து 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்கமுடியாத நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
தொடர்ந்து சந்தேகநபர் விளக்கமறியவில் வைக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற பிணையில் வெளிவந்ததுடன் பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment