ரணில் விடயத்தில் நாம் அனுதாபப்பட முடியாது
Posted by aljazeeralanka.com on August 26, 2025 in | Comments : 0
ரணில் பிரதமராக இருந்த போது திகன, கண்டி, மினுவாங்கொடை தாக்கப்படும் போது அதை தடுக்க ஒரு சிறு முயற்சியும் செய்யாமல் முசுப்பாத்தி பார்த்துக்கொண்டிருந்தார் என நாம் சொல்லும்போது ரணில் ஜனாதிபதியாக அப்போது இருக்கவில்லை என அரசியல் தெரியாத சிலர் கூறுகின்றனர்.
2001ம் ஆண்டு மாற்றுக்கட்சி சந்திரிக்கா
ஜனாதிபதியாக இருந்த போது புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்தவர் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
அது போல் மூதூர் தாக்கப்பட்ட போது மூதூர் முஸ்லிம்களை காப்பாற்ற ரணில் தலையிட வேண்டும், ரணில் மூதூருக்கு வரும்வரை மூதூரை விட்டு வெளியேற மாட்டேன் என ரவூப் ஹக்கீம் அறிக்கை விட்டார்.
பிரதமருக்கு அதிகாரம் இல்லை என்று தெரியாத மடையனாக ஹக்கீம் இருந்தாரா? இல்லை. அவருக்கு தெரியும் பிரதமருக்கும் உள்ளது என்பது ஹக்கீமுக்கும் தெரியும்.
கடைசியில் ரணில் மூதூருக்கு வராமலே ஹக்கீம் தலை குணிந்து மூதூரில் இருந்து ஓடினார்.
அதே ஹக்கீமும், ரிசாத் அமைச்சராக இருக்கும் போதுதான் ரணில் மைத்திரி ஆட்சியின் பிரதம அமைச்சராகவும், சமூக பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்து முஸ்லிம் சமூகத்தை தாக்க அனுமதியளித்திருந்தார். இது விடயத்தில் அவர் மைத்திரியுடன் முரண்படவே இல்லை.
இதே ரணில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது ஹக்கீமும் சுமந்திரனும் விழுந்தடித்துக்கொண்டு ரணிலுக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற நீதி மன்றம் ஏறினர். பிரதமருக்கு ர்ந்த அதிகாரமும் இல்லை என்றால் என்ன கூந்தலுக்கு ரணிலுக்காக நீதிமன்றம் ஏற வேண்டும்?
நாட்டில் ஜனாதிபதிக்கு அடுத்ததாக பிரதமருக்கும் அதற்கு அடுத்ததாக அமைச்சர்களுக்கும் அதிகாரம் உண்டு.
தலைவர் அஷ்ரப் ஜனாதிபதியாக, பிரதமராக இருக்கவில்லை. ஆனாலும் அமைச்சர் என்ற அதிகாரத்தில் துறைமுகத்தில் பலருக்கு தொழில் கொடுக்கவில்லையா?
ரணிலின் வரலாற்றில் அவர் முஸ்லிம் சமூகத்துக்கு செய்த துரோகங்களே அதிகம். புலி பேச்சுவார்த்தையில் முஸ்லிம் தனித்தரப்பை மறுத்தார்.
மூதூர் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தார்.
ஆகவே ரணில் விடயத்தில் நாம் அனுதாபப்பட முடியாது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
முஸ்னத் முபாறக்
தலைவர்.
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்.
26.8.2025
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment