இன்றைய மீலாத் தினம்
Posted by aljazeeralanka.com on September 05, 2025 in | Comments : 0
இன்றைய மீலாத் தினம் எனும் இலங்கை முஸ்லிம்களின் கலாசார நிகழ்வை இஸ்லாம் வரையறுத்த நியதிகளின் பிரகாரம் கொண்டாடும் முஸ்லிம்களுக்கு ஸ்ரீலங்காவின் ஐக்கிய காங்கிரஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
ரசூல் சல்லலாஹு அலைஹி வசல்லம் வாழ்ந்த போது அவர்களின் பிறந்த திகதி 12 ந்திகதி ஒவ்வொரு மாதமும் வரும். அது போல் ரபியுல் அவ்வல் மாதமும் ஒவ்வொரு வருடமும் வரும். ஆனாலும் நபியவர்கள் தனது பிறந்த திகதி 12, ரபியுல் அவ்வலில் தம் பிறந்த தினத்தை நினைவு கூராமல் தான் பிறந்த நாளான திங்கட்கிழமையை மதித்துள்ளார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமையும் அன்னார் நோன்பு நோற்றார்கள். இது பற்றி கேட்கப்பட்ட போது திங்கள் கிழமையே தனது பிறந்த நாள் என ரசூலுள்ளாஹ் சொன்னார்கள்.
நபியவர்களை மதிக்கும் ஒவ்வொருவரும் திங்கள் கிழமைகளில் நோன்பு நோற்று நபியவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்வது நபி வழியாகும்.
அதே வேளை ரபீயுல் அவ்வல் 12ந்திகதி நபியுள்ளாவின் பிறந்த தினத்தை எடுப்பது பிற்கால முஸ்லிம்கள் ஏற்படுத்திக்கொண்ட கலாசாரமாகும்.
இக்கலாசாரத்தை பல முஸ்லிம் நாடுகள் அங்கீகரிப்பதால் இலங்கை முஸ்லிம்களில் பலரும் அதை ஏற்றுக்கொள்வதாலும் இதனை ஒரு கலாசாரமாக கருதி கொண்டாடும் முஸ்லிம்களை ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் வாழ்த்துவதுடன் இந்நாளில் ஏழைகளுக்கும் இயலாதோருக்கும் உதவி செய்து நினைவு கூருவோம்.
முஸ்னத் முபாறக்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment