BREAKING NEWS

20 அம்ச திட்டத்துக்கு மிகச்சாதுர்யமாக பதிலொன்றை ஹமாஸ்

டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்துக்கு மிகச்சாதுர்யமாக பதிலொன்றை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. உயிருடனிருக்கும், உயிரிழந்த அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க தயார் என்றும் அதற்கான கள நிலவரத்தை உருவாக்குவது தொடர்பாக அனுசரனையாளர்களூடாக உரையாட தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளது. காசாவின் நிர்வாகத்தை பாலஸ்தீனத்தை சேர்ந்த அரசியல் சார்பற்ற, சுயாதீனமான தொழில்நுட்ப நிபுணர்களின் கட்டமைப்பிடம் கையளிக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆக, பணய கைதிகள், மற்றும் காசா நிர்வாகத்தில் ஹமாசின் பிரசன்னமின்மை என்ற இரண்டு விடயங்களுக்கும் ஹமாஸ் நேரடியாகவே பதிலளித்து விட்டது. டோனி பிளேயர் டொனால்ட் ட்ரம்ப் இணைத்தலைமையின் கீழான Peace Council என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது. ட்ரம்பின் திட்டத்தில் கூறப்பட்டுள்ள காசாவின் எதிர்காலம் தொடர்பானதும் பாலஸ்தீன மக்களின் பறிக்க முடியாத உரிமை தொடர்பானதுமான விடையங்களை பாலஸ்தீன பொது நிலைப்பாட்டினதும், சர்வதேச சட்டங்கள், பிரேரனைகளின் அடிப்படையிலும் விரிவாக உரையாடப்படவேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. சுயநிர்னயத்துக்காக ஆயுதமேந்தி போராடுவதை சர்வதேச சட்டங்கள் அங்கீகரிக்கின்றன. ஆயுதங்களை கீழே போடவேண்டும் என்ற ட்ரம்ப் திட்டத்தின் அம்சத்தை சூசகமாக ஹமாஸ் அமைப்பு நிராகரித்துவிட்டது. நல்லெண்ணத்திலோ அல்லது ஹமாஸ் அடிபணிந்து விட்டதாக காண்பிக்கவோ ஏதாவதொரு நோக்கத்தில் அனேகமான சர்வதேச ஊடகங்கள்; பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துவிட்டது என்றே தலைப்பிட்டுள்ளன. ஹமாஸுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியும் இதுதான். பணயக்கைதிகளை விடுவித்தால் அடுத்த கணம் தாக்குதலை நிறுத்துவோம் என்று ஐ.நா உட்பட எல்லா இடத்திலும் போலியாக கூவிய நெதன்யாகு என்ன செய்ய போகிறார் என்று முழு உலகமே கூர்ந்து நோக்குகிறது. மட்டுமல்ல யுத்தத்தை நிறுத்தி பணயக்கைதிளை விடுவிக்குமாறு தொடர் ஆர்பாட்டம் செய்யும் பணயக்கைதிகளின் உறவினர்களுக்கும் அவர்களுடன் இணைந்து ஆர்பாட்டங்களில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுக்கும் இதன் பிறகு நெதன்யாகு என்ன சொல்ல போகிறார் என்பதும் அவதானத்துக்குரியது. ட்ரம்பை பொறுத்தவரை ஹமாஸின் அறிவிப்பை சாதமாக்கி பணயக்கைதிகளை விடுவித்து தற்காலிகமாகவேனும் யுத்தத்தை நிறுத்தி நோபல் பரிசை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அவரின் கனவு நிறைவேறுமா இல்லையா என்பது வேறு கதை. ஹமாசின் அறிக்கையின் படி பணயக்கைதிகளின் விடுதலை என்பது யுத்த நிறுத்தம் மற்றும் ராணுவ மீளழைப்புகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. மட்டுமல்ல, ட்ரம்பின் திட்டத்திலுள்ள மற்றைய அம்சங்களை நேரடியாக நிராகரிக்காமல் மிக சாதுர்யமாக பதிலளித்துள்ளது ஹமாஸ் அமைப்பு. யுத்தத்தில் மட்டுமல்ல ராஜதந்திரத்திலும் ஹமாஸ் மிகச்சிறப்பாக காய் நகர்த்தியுள்ளது. -அரசியன்-

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar