BREAKING NEWS

வரலாற்றில் பணத்திற்கு சோரம் போன முதல் அரசியல் கட்சி

இலங்கை அரசியல் வரலாற்றில் பணத்திற்கு சோரம் போன முதல் அரசியல் கட்சி முஸ்லிம் காங்கிரஸ் --------------------------------------------------------- இலங்கையின் அரசியல் வரலாற்றில் பணம் பெற்று சோரம் போன முதலாவது அரசியல் கட்சி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான் என்பது குறித்து தற்போதைய இளைஞர்களுக்கு தெரியுமா? 1987 ஆம் ஆண்டில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடாத்தப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போதுதான் இது நடைபெற்றது. இந்த விடயம் இப்போதைய போராடீஸ்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. இந்த ஒப்பந்தத்தை முஸ்லீம்கள் மீது எழுதப் பட்ட அடிமைச்சாசனம் என விமர்சித்து இந்த தேர்தலில் எம்மால் பங்குபற்ற முடியாதென முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அமரர் MHM அஸ்ரப் அறிக்கை விட்டார். இந்த தேர்தலில் அன்றைய நாட்களில் இருந்த முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை.ஆட்சியில் இருந்த ஐ.தே.க. ஒப்புக்கு போட்டியிட்டது. ஒருவர் மட்டும் தெரிவானார். அவர் மசூர் மௌலானா ஆவார். அப்போதைய இந்திய ஹைகமிசனர் ஜே.என். டிக்சித் வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு உத்தியோகப்பற்றற்ற ஒரு இந்தியஆளுனர் ஆகவும் இருந்தார்.எப்படியும் முஸ்லிம் காங்கிரஸ்.க்ஷ கட்சியை இந்த தேர்தலில் போட்டியிட வைத்தாக வேண்டுமென்பது இந்திய அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. இதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் டிக்சித்+ அஸ்ரப்பிற்கு இடையில் தொடராக நடைபெற்றுவந்தது. இறுதியாக அஸ்ரப் இத்தேர்தலில் போட்டியிட சம்மதித்தார்.இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சேகு இஸ்ஸதீன் எதிர்க் கட்சித் தலைவரானார். இதற்காக இந்திய அரசாங்கம் மூட்டை, மூட்டையாக பணமும் பலநூற்றுக்கணக்கில் ஆயுதங்களும் முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கியது. இவை யாவும் அப்போதைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் சேகு இஸ்ஸதீனின் அக்கரைப்பற்று வீட்டில் இந்திய உலங்கு வானூர்தி மூலம் கொழும் பில் இருந்து இந்திய அமைதிப்படையால் கொண்டு வந்து கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு முதல் இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் கட்சியொன்றுக்கு பணப் படப்பட்டுவாடா செய்யப்பட்ட நிகழ்வு பற்றி அறிந்திருக்கவில்லை. ஏ.எல்.முகம்மட் முக்தார் சிரேஸ்ட ஊடகவியலாளர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar