BREAKING NEWS

சாய்ந்தமருதுக்கு சபை கிடைக்காது என்கிறாரா ஹக்கீம்

அப்ப சாய்ந்தமருது "வர்த்தமானி"யின் நிலை அதோ கதிதானா...??? இவ்வாறுதான் நடக்கும் என்பதை ஹக்கீம் முன்கூட்டியே எப்படி அறிந்தார்....??? கல்முனை மாநகரசபை தேர்தலுக்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டு வர்த்தமானி சம்பந்தமான விசாரணை நடந்துவருவதை நாம் எல்லோரும் அறிவோன். அந்த வர்த்தமானி உயிரோடு இருப்பதாக நீதிமன்றம் கருதினால் அந்த வர்த்தமானியில் சொல்லப்பட்டது போன்று கல்முனை மாநகரசபையின் எல்லைகள் மீள் பரிசீலனை செய்யப்படவேண்டிவரும். அந்த விடயங்களை கையாள விசாரணை கொமிசன் அமைக்கப்பட்டு அவர்களது தீர்மானத்தின் பிரகாரம் மாநகர சபையுடன் சேர்த்து இன்னும் பல நகரசபைகள் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன, இதற்கு பல மாதங்கள் ஆகலாம். அதற்கு மாற்றமாக புதிய வர்த்தமானி செயல்பாட்டில் இல்லையென்று நீதிமன்றம் தீர்மானிக்கின்றபோது, பழய எல்லைகளுடன் முழு மாநகரசபைக்குமான தேர்தல் உடனே நடைபெறும் சாத்தியக்கூறுகளே இருக்கின்றன. இந்த நிலையில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகின்றது என்பது யாருக்குமே தெரியாத நிலையில் நீதிமன்றம் இந்த முடிவுக்குத்தான் வரும் என்று முன்கூட்டியே பொதுவெளியில் யாரும் கருத்துகூற முடியாது. ஒருவர் இதுபற்றி கருத்துகூறுவதாக இருந்தால் "ஒருவேளை நீதிமன்றம் இந்த தீர்ப்பையும் வழங்கலாம் என்றுதான் கூறமுடியுமே தவிர, இந்த தீர்ப்புத்தான் கிடைக்கும் என்று பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ பொதுவெளியில் யாரும் கருத்து தெரிவிக்க முடியாது. அப்படி யாராவது நிச்சயித்து கருத்துகூறினால் அது நீதிமன்றத்தின் நம்பிக்கை தன்மையை ஒருவர் கேள்விக்குட்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கபட வேண்டிவரும். இந்த நிலையில்..... நேற்று கல்முனையில் நடந்த மு.காங்கிரசின் கட்சி கூட்டத்தில் மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீம் அவர்கள் பேசுகின்றபோது, கல்முனை மாநகரசபைக்கான தேர்தல் இந்த வருட கடைசியிலோ அல்லது அடுத்தவருட முற்பகுதியிலோ நிச்சயமாக நடக்கும் என்றும், அதற்கு சகலரும் தயாராக வேண்டும் என்றும், சாய்ந்தமருதிலுள்ள ஆறு வட்டாரங்களையும் சிராஸ் மீராய்வு வென்று தரவேண்டும் என்றும், கல்முனை, மருதமுனை, நற்பட்டிமுனை ஆகிய பகுதிகளிலுள்ள 6+4+1 வட்டாரங்களை நிசாம் காரியப்பர் வென்று தரவேண்டும் என்றும், அதற்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும் என்ற பாணியில் தனது கருத்தை முன்வைத்திருந்தார். இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்க்கின்றபோது, நீதிமன்றத்திலுள்ள வர்த்தமானி சம்பந்தப்பட்ட தீர்ப்பு " புதிய வர்த்தமானி நிராகரிக்கப்படும் என்று ஹக்கீம் நிச்சயமாக நம்பியதனால்தான்" அவர் முழு மாநகரசபை தேர்தலுக்கும் தயாராகுங்கள் என்று பகிரங்கம்கவே கூறினார் என்பது புலனாகும். அவருக்கு தீர்ப்பு இப்படித்தான் அமையும் என்று தெரியாது விட்டிருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். மாறாக நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததன் பின் கல்முனை மாநகரசபைக்கு மட்டும் தேர்தல் நடக்குமா அல்லது பல சபைகளாக பிரித்ததன் பின் தேர்தல் நடக்குமா என்பது தெரியாது, தீர்ப்பு வந்ததன் பின் அதுபற்றி சிந்தித்து செயல்படுவோம் என்று அவர் கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி கூறவில்லை. மாறாக முழு கல்முனை மாநகரசபைக்கும் தேர்தல் நடக்கப்போகின்றது அதற்கு தயாராகுங்கள் என்றுதான் கூறினார். இந்த கூற்றின் மறைமுக அர்த்தம் என்னவென்றால், புதிய வர்த்தமானி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்பதுதான் அதன் அர்த்தமாகும். அதனை மறைமுகமாக சொல்கின்றார் என்பதை நாம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. நீதிமன்றம் இவ்வாருதான் நடந்துகொள்ளும் என்ற விடயம் பிரபலமான ஒரு சட்ட முதுமானியும், கட்சியின் தலைவராகவும் இருக்கின்ற ஹக்கீம் அவர்களுக்கு எவ்வாறு தெரியவந்தது என்ற ஐயம் எழுகின்றதா இல்லையா? இது எங்களுக்கு ஏற்படும் ஐயமே தவிர இதுதான் நடந்தது என்று கூறவரவில்லை. ஆனால் ஹக்கீமின் வாயினால் வருகின்ற சில பேச்சுக்களை சாதாரண பேச்சுக்களாக நாம் புறந்தள்ளிவிட முடியாது. அவரது பேச்சு காத்திரமானதும் நம்பிக்கை கொண்டதுமான பேச்சாகவே இந்த விடயத்தில் இருக்கின்றது எனலாம். அவரது அந்த பேச்சின் பிரகாரம் நீதிமன்றத்திலுள்ள வர்த்தமானி சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படும். அதன் காரணமாக முழு கல்முனை மாநகரசபைக்கும் தேர்தல் நடக்கும் என்று நிச்சயித்து கூறுவதாகவே கருதவேண்டியுள்ளது. இதன் உண்மைத் தன்மையை அறிவதாக இருந்தால் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஹக்கீம் சொல்வதைபோல் தீர்ப்பு வருமாக இருந்தால், இந்த தீர்ப்பு இவ்வாருதான் அமையுமென்ற விடயம் ஹக்கீமுக்கு முன்கூட்டியே எவ்வாறு தெரியவந்தது என்ற கேள்வி எழும்....?? ஆகவே, ஹக்கீம் அவர்களின் கூற்றை பார்க்கின்றபோது நீதிமன்றத்திலுள்ள வர்த்தமானி வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றுதான் நான் நினைக்கின்றேன்....மற்றதை நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள்.....புரிந்தால் சரிதான்.....!??? -#முனைமருதவன்♥-

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar