BREAKING NEWS

ஈரானும் ,வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்கப் படைகளும்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ✍️அஷ்ஷைஹ் பாஃயிஸ் அல்கந்தரி அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக. சிலர், வளைகுடா நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்கள் இருப்பதை காரணமாக்கி, அவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நியாயப்படுத்த முயல்கின்றனர். அமெரிக்கத் தளங்கள் பற்றிய விவாதத்திற்கு முன்னர் நாம் கேட்க வேண்டிய சில கேள்விகள்: நீங்கள் பயன்படுத்தும் அளவுகோல்— அது உண்மையிலேயே நீதி மிக்கதா? அது எல்லோருக்கும் ஒரே அளவாகப் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது, நீங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும் கடுமையாகவும், உங்களுக்காக மட்டும் சலுகையுடனும் பயன்படுத்தப்படும் இரட்டை அளவுகோலா? அல்லாஹ் கூறுகிறான்: وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். (அல்குர்ஆன் : 4:58) மேலும்: اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். (அல்குர்ஆன் : 16:90) எனவே, இந்த விவகாரத்தில் நாமெல்லாரும் நம்மையும், மற்றவர்களையும் ஒரே தரத்தில் வைத்து மதிப்பிட வேண்டும். இந்த தாக்குதல்களை நியாயப்படுத்துவோர் மூன்று வகைகள்: 1️⃣. “சஃபவீ (ஈரானிய) திட்டத்தின் கீழ் உள்ளவர்கள்” நாங்கள் அவர்களிடம் கேட்கிறோம்: தற்காப்பிற்காக கட்டாயமாக அமெரிக்க உதவியை நாடியவர் பெரிய குற்றவாளியா? அல்லது, எந்த கட்டாயமும் இல்லாமல் அமெரிக்காவுடன் சேர்ந்து, முஸ்லிம் நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியவர் பெரிய குற்றவாளியா? ஈரான் தானே அமெரிக்காவுடன் பலமுறை ஒத்துழைத்துள்ளது: ஈராக் போரில் மறைமுக ஒத்துழைப்பு ஆப்கானிஸ்தானில் உதவி.... கூடுதலாக, இஸ்ரேலுடன் ஆயுத வர்த்தக குற்றச்சாட்டு (ஈரான்-கொன்ட்ரா) அப்படியானால், மற்றவர்களை குற்றம் சொல்வது எவ்வளவு நேர்மையானது? 2️⃣. “தேசியவாத உணர்ச்சியில் மூழ்கியவர்கள்” ஒருவர் தன் நாட்டைப் பாதுகாக்க அமெரிக்கத் தளங்களை அனுமதிப்பது குற்றமா? ஆனால், இன்னொருவர் இஸ்ரேலுடன் உறவை சாதாரணமாக்கி, தூதரகங்களை திறக்க அனுமதிப்பது குற்றமல்லயா? நீங்கள் வளைகுடா நாடுகளின் மீது தாக்குதலை நியாயப்படுத்தினால், அதே தரத்தில் உங்கள் நாட்டின் மீது வரும் தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். இல்லையெனில், அது வெளிப்படையான நயவஞ்சகத்தனமான இரட்டை நிலைப்பாடு. 3️⃣ “இயக்க தீவிரவாதிகள்” எகிப்தில் அரபு வசந்த காலத்தில், தற்காப்புக்காக நீங்கள் அமெரிக்காவிடம் உதவி கோரவில்லையா? லிபியாவில் நேட்டோ படையினரிடம் தற்காப்புக்காக நீங்கள் உதவியை சிலர் அனுமதிக்கவில்லையா? அப்படியானால்: உங்களுக்கு ஹலால் — மற்றவர்களுக்கு ஹராமா? முக்கியக் கேள்வி: இது “இஸ்லாம் vs குஃப்ர்” என்ற பிரச்சினையா? இல்லை. இது “நீதி vs அநீதி” என்ற பிரச்சினை. குவைத் எடுத்துக்காட்டு: 1980களில் குவைத் அமெரிக்கத் தளங்களை மறுத்தது. ஆனால் பின்னர், ஈராக் தாக்குதல் அண்டை நாடுகளின் துரோகம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இதனால் அவர்கள் கட்டாயமாக அமெரிக்க உதவியை ஏற்றுக்கொண்டனர். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: சில நேரங்களில் அது விருப்பத் தேர்வு அல்ல — அவசரத் தேவை. ஒரு உவமை: நீங்கள் வெளிநாட்டில் குடும்பத்துடன் இருக்கும்போது, ஒரு கொள்ளைக் கும்பல் தாக்கினால், உங்கள் முஸ்லிம் நண்பர்கள் உதவாமல் இருந்தால், நீங்கள் போலீசை அழைத்தால் — அது தவறா? அப்படியே தான் இந்த சூழ்நிலை. தீர்வு: அமெரிக்கத் தளங்கள் நிலையான தீர்வு அல்ல அவை ஆபத்தானவையாகவும் மாறக்கூடும் ஆனால்: மாற்று வழி இல்லாமல் அவற்றை அகற்றுவது — இன்னும் பெரிய ஆபத்து... அதற்கு ஒரு உதாரணம் கத்தி குத்தப்பட்ட ஒருவருக்கு உதவுகிறோம் என்ற முறையில் குத்தப்பட்ட கத்தியை வயிற்றிலிதிருந்து உருவ முடியுமா ? அது ஒரு உயிரை கொன்று விடாதா ? அல்லது முறையாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர் உதவி உடன் அதை அகற்றுவதா ? எது சாலச் சிறந்தது ? இந்த பிரச்சனைக்குரிய உண்மையான தீர்வுகள்: 👉அரபுகளும் இஸ்லாமிய உம்மதும் அல்லாஹ்விடம் முழுமையாக திரும்புதல். 👉நீதி நிலைநாட்டுதல் 👉முஸ்லிம் நாடுகளின் ஒன்றுபாடு இவைகளே... இறுதியாக: நாம் அனைவரும் நம்மைத் சீர்திருத்திக் கொள்ள வேண்டும். நயவஞ்சகத்தனமான இரட்டை நிலைப்பாடுகளை கைவிட்டு, உண்மையான நீதி நிலைப்பாட்டை ஏற்க வேண்டும். அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடத்துவானாக. அவன் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் நம்மூலம் பாதுகாப்பானக. நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக. உரையை முழுவதுமாக அரபு மொழியில் கேட்க 👇 https://youtu.be/vQVAnmBFv_c?si=UE4p2NPVQ368zlc7 #voice_of_ismail_nadwi #ஈரான் #ஷீஆ

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar