BREAKING NEWS

சௌதி அரேபியாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வேண்டும்

அரபு நாடுகளில், குறிப்பாக சௌதி அரேபியாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட வேண்டும் என சிலர் எழுதுவதை பார்க்க கிடைக்கிறது. “இது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும்”. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மன்னராட்சி முறை இருப்பது, அங்கு நீண்டகாலமாக ஒரு நிலையான ஆட்சி நிலவவும், குழப்பங்கள் தவிர்க்கப்படவும் காரணமாக இருக்கிறது. "ஜனநாயகம் என்ற பெயரில் அடிக்கடி ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் குழப்பத்தையே விளைவிக்கும்” ஒற்றைத் தலைமை என்பது முடிவுகளை விரைவாக எடுக்கவும், சமூகக் கட்டமைப்பைச் சிதையாமல் காக்கவும் உதவுகிறது. மக்கா, மதீனா போன்ற புனித இடங்கள் அரசியல் போட்டிகளுக்கு அப்பாற்பட்டு, ஒரு பொறுப்பான தலைமையின் கீழ் இருப்பது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு ஒருவித நம்பிக்கையைத் தருகிறது. “ஜனநாயகம் என்ற பெயரில் அடிக்கடி மாறும் அரசியல் போக்குகள்” புனிதத் தலங்களின் நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் நிலவுகிறது. உதாரணமாக ஈரானில் 'விலாயத்தே ஃபகிஹ்' எனும் உயர்மட்ட மதத் தலைவரின் அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை விட மேலோங்கியது. சவுதி அரேபியா போன்ற நாடுகளின் மன்னராட்சி முறையை தற்போதைய இஸ்லாமிய அறிஞர்கள் ஆதரித்தாலும், "மன்னர்கள் மாற வேண்டும்" அல்லது “தகுதியானவர்கள் குறித்த தலைமைக்கு” வரவேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் மன்னராட்சி முக்கியம், ஆனாலும் அதில் அமரும் நபர்கள் இஸ்லாமிய மார்க்க விழுமியங்களோடு பொறுப்புணர்வோடு நடக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். __ _ஹம்ஸா கலீல்

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar