Supreme Leader உடைய - வளைகுடாவின் கடைசி எச்சரிக்கை”
Posted by aljazeeralanka.com on March 14, 2026 in | Comments : 0
“Supreme Leader உடைய - வளைகுடாவின் கடைசி எச்சரிக்கை”
நேற்று இரவு, Supreme Leader Mojtaba Khamenei....
அவர் 12 நிமிடங்கள் ஈரான் மக்களிடம் உரையாற்றினார். இதுதான் அவரது முதலாவது ராஜ்ய அதிகா உரை. ஆனால் அந்த உரை உண்மையில் ஈரான் மக்களுக்காக இல்லை.
அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நேராக வாஷிங்டனை நோக்கியதாக இருந்தது.
முதல் ஆறு நிமிடங்களில், அவர் “அமெரிக்க குற்றங்களின் பட்டியலை” வாசித்தார்.
அவரது தந்தை Ali Khamenei மீது நடந்த தாக்குதல்,
ஈரானிய அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள்,
பல தசாப்தங்களாக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள்,
இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க ஆதரவு,
அரபு நிலங்களில் அமெரிக்க இராணுவ தளங்கள். —
இவை அனைத்தும் ஈரானின் அரசியல் உரைகளில் பல ஆண்டுகளாகக் கேட்கப்பட்டவையே.
ஆனால் ?
ஏழாவது நிமிடத்தில் அவரது குரலும் கருத்தும் மாறின. அநீதிக்கு சவால் விட்ட குரலில் அதிகாரம் ஜரிகையிட்டது.
அவர் கடந்த காலத்தை விட்டுவிட்டு இப்பொழுது எதிர்காலத்தைப் பற்றி பேசத் தொடங்கினார்.அப்போது அவர் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தார்.
இந்த கோரிக்கைகளின் முழு உரை சுவிட்சர்லாந்து வழியாக அமெரிக்க வெளியுறவு துறைக்கு அனுப்பப்பட்டது.
பல ஊடகங்கள் “அமெரிக்கா மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும்” என்று மட்டும் செய்தியாக வெளியிட்டன.
ஆனால் அது முழு உரையின் ஒரு பகுதி மட்டுமே.
உண்மையில் அவர் முன்வைத்த கோரிக்கைகள் மிகவும் கடுமையானவை.
கோரிக்கை 1
அமெரிக்காவின் அனைத்து இராணுவப்படைகளும்
ஈராக், சிரியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து
30 நாட்களுக்குள் வெளியேறத் தொடங்க வேண்டும். அதுவும்
பேச்சுவார்த்தைக்கு பிறகு அல்ல.
இன்றிலிருந்து 30 நாட்களுக்குள்.
கோரிக்கை 2
1979 முதல் ஈரானுக்கு விதிக்கப்பட்ட அனைத்து அமெரிக்க பொருளாதார தடைகளும்
60 நாட்களுக்குள் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
இதில்:
வங்கி கட்டுப்பாடுகள்
எண்ணெய் ஏற்றுமதி தடைகள்
தொழில்நுட்ப பரிமாற்றத் தடைகள்
எல்லாம் அடங்கும்.
கோரிக்கை 3
கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பொருளாதார இழப்புக்கு
அமெரிக்கா ஈடு தொகை (reparations) வழங்க வேண்டும்.
ஈரானின் கணக்குப்படி, “பொருளாதார போர்” காரணமாக
அவர்கள் 800 பில்லியன் டாலர் இழந்துள்ளனர். ஆனால்,
அவர்கள் கோரிய தொகை:
500 பில்லியன் டாலர்.
அது 10 ஆண்டுகளில் செலுத்தப்பட வேண்டும்.
இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால்?
காமெனெய் மூன்று நடவடிக்கைகளை அறிவித்தார்.
நடவடிக்கை 1
30 நாள் காலக்கெடு முடிந்தவுடன்
Strait of Hormuz
அனைத்து வணிகக் கப்பல்களுக்கும் மூடப்படும்.
உலக எண்ணெய் போக்குவரத்தின் இதயம் அதுவே.
நடவடிக்கை 2
ஈரான்
Russia
மற்றும்
China
நாடுகளுடன் பாதுகாப்பு இராணுவ கூட்டணியில் சேரும்.
அதன் ஒரு பகுதியாக
ஈரான் நிலப்பரப்பில் ரஷ்யா மற்றும் சீனாவின் இராணுவ தளங்கள் உருவாகலாம்.
நடவடிக்கை 3
ஈரான் “முழுமையான அணு தடுப்பு திறன்” உருவாக்கும்.
அவர் நேரடியாக “அணு ஆயுதம் உருவாக்குவோம்” என்று சொல்லவில்லை. ஆனால்
“அதை பயன்படுத்தத் தயாராக இருப்போம்” என்ற வார்த்தையை அவர் மிகவும் கவனமாக பயன்படுத்தினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment