BREAKING NEWS

ACJU செயலாளர் மீது விசாரணை

அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பொதுச் செயலாளர் #அர்கம் #நூராமி ஸவூதி அரேபிய அதிகாரிகளால் புனித மக்காவில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார் என்ன செய்தியும் ஏனைய தலைவர்கள் முப்திகள் சென்றால் சற்று சிந்திக்க வேண்டும் என்ற கருத்துக்களும் சமூக வலயதலத்தை அழங்கரித்தீ வருகின்றன. அர்கம் நூராமி தற்போது புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காகவும் குறிப்பிட்ட ஒரு தனியார் ஹஜ் முகவர் குழுவின் வழிகாட்டியகவும் புனித மக்கமா நகர் சென்றுள்ள நிலையில் மினா மைதானத்தில் இருந்து ஸவூதி அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளர் என அறியக்காட்டியது. முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சின் இஸ்லாமிய நூல்கள் மீளாய்வு குழு உறுப்பினர் என்ற வகையில் ஸவூதி அரேபியாவில் இருந்து தருவிக்கப்பட்ட சில நூல்களும் தர்ஜுமதுல் குர்ஆன் பிரதிகளும் இலங்கை சுங்கத்தினால் விடுவிக்கப்படாமைக்கு பரிந்துரைத்த குழுவின் பிரதான சூத்திரதாரி அல்லது தலைமை தாங்கியவர் என்றும்.. அவர் வழிகெட்ட அகீதாவை கொண்டவர் என்றும், ஸுபிஸ முகாமைச் சேர்ந்த பிரதானி என்றும், தனது வழிகெட்ட அகீதாவை ஹஜ் யாத்திரிகர்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்காக மக்கா வந்திருப்பதாகவும் ஸவூதி குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட முறையீட்டின் படியே மேற்படி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகளை பரப்புரைக்கும் நிலையில் அந்த பிரஜாவுரிமை பெற்றவரே பேசியுள்ளார் அவ்வாறு எதுவும் பெரிதாக இடம்பெறவில்லை என. முறையீட்டாளர் தான் மக்காவில் உள்ள இலங்கை ஹஜ்ஜாஜிகள் நலன்புரி அமைப்பின அறங்காவலர் என்றும், சவூதி அதிகாரிகளுடனும் இலங்கை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பவர் என்றும் தான் இலங்கை தூதரகம், இலங்கை கொன்ஸல் ஜெனரல் காரியாலயம், இலங்கை முஸ்லிம் சமய கலாசார விவகார திணைக்களத்தின் அனுமதி உடனேயே மேற்படி நூல்களை அனுப்பி வைத்ததாகவும் தனது முறையீட்டில் தெரிவித்துள்ளார். என மேலும் மெருகூட்டி எழுதியும் வருகின்றனர். இங்கு அர்கம் ஒரு தனியாளாகவோ, அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் பிரதிநிதியாகவோ, அல்லது ஒரு ஹஜ் முகவர் நிலைய வழிகாட்டியாகவோ இல்லாமல் , இலங்கை அரசின் ஆலோசனை சபை உறுப்பினராகவே தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார் எனவும், அது பிரிதொரு நாட்டின் உள் விவகாரத்தில் ஸவூதி அதிகாரிகள் மேற் கொண்ட அப்பட்டமான தலையீடு செய்ய முடியாது எனவும் எழுதியுள்ளனர் ஆனால் இவர் தலைமையிலேயே கிட்டத்தட்ட 26000 அல்குர்ஆன் தர்ஜுமாக்கள் திருப்பி அனுப்பவும் பல கோடி ரூபா நஷ்டமாக்குவுமான தீர்மானம் வழங்கப்பட்டது என்பதை நாம் மறந்நுவிடக்கூடாது. எனவே இது வரை காலமும் பல ஆண்டு காலமாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த தர்ஜூமாவை புதிதாகாக என்ன தவறு கண்டு தடுக்கப்பட்டது என்பது குறித்து தீர விசாரிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அந்த நாட்டு அரசிற்கு உள்ளது என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான ஸவூதி தூதுவரை அழைத்து அரசின் பலத்த ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டிய எந்த தேவைப்பாடும் இல்லை என்பதை அர்கம் நூரானியின் செம்பு தூக்கி கள் உணர வேண்டும். மேற்படி சம்பவம் குறித்து பூரண விசாரணைகளை முன்னெடுக்க சவூதி அரசிற்கு உரிமை உள்ளது என்பதை இங்குள்ள முல்லாக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அர்கம் நூராமி நீதியையும் இழப்பீட்டையும் பெற்றுக் கொடுக்க வேண்டு என யாராவது ஆசைப்பட்டால் அவர்கள் தங்களது பெயர்களை சவூதி உயர்ஸ்தானிகர் ஆளயத்தில் கொடுத்து அவர்களே நேரடியாக பேசிக்கொள்ள வேண்டும். ஸவூதி அரசின் சம்மந்தப்பட்ட தரப்புகள் அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும், அவர் ஸவூதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்குமாறும் மேற்படி முறைப்பாட்டாளர் தனது முறையீட்டில் குறிப்பிட்டுள்ளாதாக எழுதிவருபவர்களுக்கு பதிலாக கீழுள்ள காணொளி பதில் தருகிறது. சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டு இலங்கையருக்காக தரப்படும் 3500 ஹஜ் யாத்திரிகர்களுக்கான கோட்டாவில் ஹஜ் விசாவில் புனித ஹஜ்கடமையை நிறைவேற்ற சென்ற அவருக்கு எதிராக முறையீடுகள் கிடைக்குமிடத்து தடுத்து விசாரிக்க ஸவூதி அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. அந்த நாட்டின் சட்டத்திற்கும் இறையாண்மைக்கும் பங்கம் விளைவிக்கும் எவரையும் அந்த நாட்டின் சட்டத்திற்கு உட்படுத்தி விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் சவுதி அரசாங்கத்துக்கு முழுமையான அதிகாரத்தை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. கிண்ணியாவைச் சேர்ந்த நாபியா என்ற பெண் சிரச்சேதம் செய்யப்பட்டது அந்த சட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே என்பதை அரகம் நூராமிக்கு உட்பட்டது என்பதை அர்கம் நூயானி விடயத்தில்ஸவரிந்து கட்டுபவர்களும் எழுதுபவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து கீழ்வருமாறு சிலர் எதிர்பார்த்து எழுதி வருகின்றனர். மேற்படி முறைப்பாடு, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த பூரணமான அறிக்கையை சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத் மற்றும் கொன்ஸல் ஜெனரல் முன்னாள் மேல்நீதிமன்ற நீதியரசர் ழஃபர் தாஹீர் ஆகியோர் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என எழுதி வருகின்றனர். ஆனால் அதற்கு வாப்பில்லை ராசா வாய்ப்பில்லை என்றே கூற முடியும். காரணம் அப்படி எதுவும் ஊதிப்பெரிதாக்கிய அளவுக்கு ஒன்று நடக்கவில்லை. அர்கம் நூராமி அவர்களுக்கு சட்ட உதவிகள் தேவைப்படுமிடத்து அவருக்கு மட்டுமல்ல ஏனைய 3500 இலங்கை ஹஜ் யாத்திரீகற்களுக்கும் சட்ட உதவி தேவைப்படுமிடத்தீ பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் ஹஜ்கடைமைக்காக அங்கு சென்றிருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள். இவ்வாறு ஊதி பெரிதாக்கி எழுதுபவர்கள் எங்கோ அரசின் மீது விமர்சனத்தை கோருத்து விட முயற்சிப்பது புலனாகின்றது. சட்ட உதவிகளை பெற்றுக்கொடுக்க இலங்கை முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கத்தையோ, அவருக்கு தேவையான அரச யந்திர ஒத்துழைப்பை பெற்றுக்கொள் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமோ தேவை என்றால் அவர் சார்ந்தவர்கள் அல்லது ஜமியதுல் உலமா சபை ஊடாக அரசிடம் எழுத்து மூலமா கேரிக்கையை வைக்கலாம். அல்குர்ஆனில் பிழை காண்பிப்பது அல்லது அதை தடை செய்வது என்பது இஸ்லாமிய அடிப்படையில் சிரச்சேதம் செய்யும் அளவிலான குற்றமாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக சல்மான் ருஸ்தியுடய விடயத்தை கட்டலாம். அவ்வாறு ஒரு விடயத்தில் அர்கம் நூராமி சம்பந்தப்பட்டிருந்தாலும் இலங்கை அரசின் தேவையை அல்லது அன்றைய ஆட்சியாளர்கள் ஜனாஸா எரித்த கதையை எல்லாம் கதை கதை என்று கதைத்து பூசி மெழுகி தட்டி தாண்டி வந்துவிடும் அளவுக்கு நல்லா பேசுவாரு நூராமி. ✍️ 30.05.2026 Muneer Mulaffer #ctj #acju #muslim

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar