தமிழ் தேசியம் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்
Posted by aljazeeralanka.com on May 05, 2026 in | Comments : 0
நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஒரு விஷயத்தை மிகத்தெளிவாகப் பறைசாற்றியுள்ளன:
"தமிழ் தேசியம் என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்" என்ற கூற்று சீமான் போன்றவர்களின் செயல்பாடுகளால் இன்று உண்மையாகி நிற்கிறது.
நாம் தமிழர் கட்சியின் இந்த வரலாற்றுத் தோல்வி, வெறும் தேர்தல் தோல்வி மட்டுமல்ல; அது வெறுப்பு அரசியலுக்கும், போலித்தனத்திற்கும் மக்கள் கொடுத்த மரண அடி.
சீமானின் இந்த மரண வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களை கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும்.
விடுதலைப் புலிகளின் வரலாற்றையும், பிரபாகரனின் ஆளுமையையும் தமிழ் மக்கள் புனிதமாக கருதுகின்றனர். ஆனால், சீமான் மேடைக்கு மேடை "ஆமைக்கறி சாப்பிட்டேன், மான்கறி தின்றேன், கறி இட்லி சாப்பிட்டேன் " என்று கூறி, ஒரு மாபெரும் விடுதலைப் போராட்ட அமைப்பை 'முனியாண்டி விலாஸ்' உணவக ரேஞ்சிற்கு தரம் தாழ்த்தினார்.
இத்தகைய புனைவுகளும், அபத்தமான பொய்களும் நடுநிலை தமிழர்களிடையே சீமான் மீதான நம்பிக்கையை முழுமையாகச் சிதைத்தன. சீமானை வெறுக்க வைத்தன.
ஆரம்பத்தில் சீமான் மீது ஆதரவாக இருந்த என்னைக்கூட நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் முற்று முழுதாக வெறுக்க வைத்தது , சீமான் கூறிய புலிகள் பற்றிய அபத்தமான பொய்களே.
திராவிடக் கட்சிகளை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, பணத்திற்காக மறைமுகமாக பாஜகவின் 'பி' டீமாக செயல்பட்டது சீமான் ஒரு திருடன் என்பதற்கான முக்கியமான ஆதாரம்.
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களுக்கு இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதும், அதே சமயம் வெளியே தமிழ் தேசியம் பேசுவதும் மக்களை ஏமாற்றும் செயல் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவரின் "போலி தமிழ் தேசியம்" உண்மையில் தமிழர்களைப் பிளவுபடுத்தும் வேலையையே செய்தது.
முக்கியமாக நாம் தமிழர் கட்சியினரின் மிகப்பெரிய பலவீனமே விமர்சனங்களை எதிர்கொள்ளத் தெரியாததுதான்.
கட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களை, இணையதளங்களில் ஆபாசமான வார்த்தைகளால் வசிப்பதும், ரவுடித்தனம் செய்வதும் அக்கட்சியின் கலாச்சாரமாக மாறியது.
சீமான் மற்றும் விஷக்கிருமி சாட்டை துரைமுருகன் போன்றவர்களின் 'விஷத்தனமான' பேச்சுக்களை மக்கள் அருவருப்புடன் நோக்கி, அவர்களைப் புறக்கணித்துள்ளனர்.
உலகத் தமிழர்களிடம் உணர்ச்சியைத் தூண்டி, 'திரள் நிதி' என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சுருட்டியது இப்போது அம்பலமானது கூட நாம் தமிழர் கட்சியை திருடர்கள் கூடாரம் என வெறுக்க வைத்தது.
சாதாரணத் தொண்டர்கள் வியர்வை சிந்தி உழைக்க, அந்தப் பணத்தில் சீமான் போன்ற தலைவர்கள் அனுபவிக்கும் சுகபோக வாழ்க்கை, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
தமிழின உணர்வை வைத்துப் பிழைப்பு நடத்தும் இவர்களின் சாயம் வெளுக்கத் தொடங்கி நாதக வீழ்ச்சியின் ஆரம்பத்திற்கு வழி வகுத்தது.
தமிழ் தேசியம் என்ற பெயரில் பிற மொழி பேசுபவர்கள் மீதும், மாற்றுச் சமூகத்தினர் மீதும் சீமான் கக்கி வந்த இனத்துவேசம், தமிழ் தேசியம் என்ற உன்னதமான சொல்லையே அருவருப்பான ஒன்றாக மாற்றிவிட்டது.
வளர்ச்சிக்குப் பதிலாக, வெறுப்பை விதைத்த இவர்களின் அரசியல் இன்று அறுவடை செய்ய ஆளில்லாமல் சரிந்து கிடக்கிறது.
இந்தத் தோல்வி சீமானுக்கு மட்டுமல்ல, தமிழ்தேசியம் என்ற போர்வையில் பிழைப்பு நடத்தும் அனைத்துப் போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடம்.
மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
இனியும் பொய்களையும், புனைவுகளையும் கொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்பதே உண்மை.
தமிழ்தேசியம் என்று சொல்லிக்கொண்டு வரும் அயோக்கியர்களை நம்ப மக்கள் தயாரில்லை.
Mukinthan Thurairaj
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment