BREAKING NEWS

சஷி வீரவன்ச 2 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி...

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு தள்ளுபடி... 2 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி... முறையற்ற வெளிநாட்டு கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபா அபராதத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (11) தள்ளுபடி செய்துள்ளது. தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுல திலகரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, இதுவரை பிணையில் இருந்த சஷி வீரவன்ச, விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar