BREAKING NEWS

அனைத்து ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக ஆலோசனை

2017 ஆம் ஆண்டு நிறைவுக்குள் இலங்கையின் அனைத்து ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் விசேட ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி 2018 ஆம் ஆண்டுக்கு முன்னராக சகல ஆசிரிய வெற்றிடங்களும் நிரப்பப்பட்டு கல்வித்துறையில் பாரிய பயன் தரும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதளவில் 1,093 பட்டதாரி ஆசிரியர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகி உள்ளது.

மேலும் 1,177 பட்டதாரி பயிலுனர்களை ஆரம்பக்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றவர்களை வெற்றிடங்கள் அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் மொழி மூலமான விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 3,482 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை சேவையில் சேர்த்துக் கொள்ளவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் ஆலோசகர்களுக்காக புதிய சேவையொன்று ஸ்தாபிக்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண பாடசாலைகளில் க .பொ.த. உயர்தரம், டிப்ளோமா சித்தியடைந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்க மாகாணங்களில் உள்ள வெற்றிடங்கள் ஆராயும் பணியும் முன்னெடுக்கப்படவுள்ளது

கல்வி அமைச்சரின் விசேட ஆலோசனையின் படியான மேற்படி திட்டங்களால் எதிர் வரும் காலங்களில் இலங்கையின் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளதாகக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar