BREAKING NEWS

தப்லீக் ஜமாத்தினர் வெளியேற்றம். காரணம் யார்?



இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் பற்றி சில ஊடகங்கள் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு முஸ்லிம்களே காரணமாக இருப்பது கவலைக்குரியதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டுள்ளார். ஆவர் மேலும் தெரிவித்திருப்பதாவது

மிகவும் அமைதியான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடும் தப்லீக் ஜமாஅத் பற்றிய அவதூறுகளை சில ஊடகங்கள் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும்.  இதற்குக்காரணமாக முஸ்லிம்களே இருப்பதுதான் மிக மிக கவலை தருவதாகவும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு;ள்ள தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத் இஸ்லாமி, தரீக்காக்கள் என்பனவற்றுக்கிடையில் புரிந்துணர்வு இல்லாமை காரணமாக சிலர் அடுத்த இயக்கத்தை பற்றி பொய்யான தகவல்களை பொலிசாருக்கு கொடுப்பதனால் ஏற்படும் விளைவுகளே இவை.



2005ம் ஆண்டளவில் இந்தியாவிலிருந்து பீ. ஜே என்ற இஸ்லாமிய பிரச்சாரகர் வந்த போது அவர் சுற்றுலா விசாவில் வந்து பிரச்சாரம் செய்கிறார் என்று தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த சிலர் அரசியல்வாதிகளிடமும் பொலிசாரிடமும் புகார் கொடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றினர். இவ்வாறே இன்னொரு சாராரால் கல்முனையில் கோவை ஐயூப்  அவர்களை உரையாற்ற முடியாமல் தடுத்தமைக்கும் அவர் சுற்றுலா விசாவில் வந்து பிரச்சாரம் செய்கிறார் என்பதே காரணமாக கூறப்பட்டது. இதே போன்று; இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபடும் இயக்கங்களுக்கு சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புண்டு என சில முஸ்லிம்கள ஆங்கில ஊடகங்களுக்கும் எழுதி வருவதையும் அண்மைக்காலமாக காணக்கூடியதாக உள்ளது.

     இவ்வாறு முஸ்லிம்களே தமக்கிடையில் பொய்யான காட்டிக்கொடுப்பில் ஈடுபட்டதன் விளைவே இன்று தப்லீக் சகோதரர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைக்கும் காரணமாகும். ஏந்தவோர் இயக்கத்திற்கும் இவ்வாறான பிரச்சினைகள் வரக்கூடாது என்பதில் நாம் அனைவரும் அக்கறையாக இருக்க வேண்டும்.
ஆகவே இலங்கை உலமா சபையால் ஹலால் பத்திரம் வழங்கப்பட்ட உணவகங்களில் உண்ணும் நாம் அதே உலமா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபடும் ஜமாஅத்துக்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதே போல் மேற்படி இயக்கங்களுக்கிடையே கூட்டமைப்பொன்றை ஈடுபடுத்தி புரிந்துணர்வுடனுடனும், இறையச்சத்துடனும் இவர்கள் செயற்படுவதன் மூலமே எதிர் காலத்தில் இத்தகைய அசௌகரியங்களை தடுக்க முடியும் என்பதையும் சொல்லி வைக்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar