BREAKING NEWS

ஐ நாவில் இலங்கைக்கு ஆதரவளித்த சஊதி அரேபியாவுக்கு நன்றிக்கடனாக அக்கரைப்பற்று வீட்டுத்திட்டத்தை முஸ்லிம்களிடம் கையளிக்க வேண்டும்.- உலமா கட்சி கோரிக்கை


அமெரிக்காவுக்கு ஆதரவான சஊதி அரேபியா, ஐ.நா சபையில் அமெரிக்காவை எதிர்த்து இலங்கையை ஆதரித்தமைக்கு நன்றிக் கடனாக சஊதி அரசாங்கத்தால் அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட சுனாமி வீடுகளை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
    இது பற்றி உலமா கட்சித் தலைவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

    பொதுவாக சஊதி அரேபியா தனது அரசியல் நலன்களை பொறுத்தவரை அமெரிக்க ஆதரவு நாடு என்பதை முழு உலகும் அறியும். அவ்வாறிருந்தும் ஜெனீவாவில் அமெரிக்காவால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கெதிராக, அதாவது அமெரிக்காவுக்கே எதிராக சஊதி அரேபியா வாக்களித்துள்ளமை ஒரு வரலாற்ற திருப்பமாகும். இவ்வாறு செயற்பட்ட சஊதி அரேபியாவுக்கு இலங்கை மிகவும் கடமைப்பட்டுள்ளது.
    இவ்வாறு சஊதி அரேபியா செயற்பட்டதன் மூலம் இலங்கையில் நிலவிய பயங்கரவாதம் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் பாரிய பாதிப்புக்குள்ளானதை அந்நாடு புரிந்து கொண்டுள்ளமையைக் காட்டுகிறது. அத்துடன் சஊதி அரேபியா இலங்கையின் அனைத்து மக்களுக்குமென பல உதவிகளையும் செய்து வருகிறது.
    இந்த அடிப்படையில் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் வேண்டுகோளுக்கிணங்க சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கென அக்கரைப்பற்றில் 500 வீடுகளை சஊதி அரசாங்கம் கட்டித் தந்தது. ஆனால் அது பற்றி இனவாதிகள் நீதிமன்றில்; முறையிட்டதன் காரணமாக வீடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
    அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை சுனாமியால் பாதிக்கப்பட்டு வீடுகள் கிடைக்காத சிங்கள மக்கள் எவரும் இல்லை. இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னமும் வீடுகள் கிடைக்காத அம்பாறை மாவட்ட மக்களுக்கு ஜனாதி நேரடியாக  தலையிட்டு அவற்றை வழங்கிவைப்பதன் மூலம் இலங்கை அரசு, சஊதி அரேபியாவுக்கான நன்றிக் கடனை செய்ததாக முடியும் என்பதை ஓர் ஆலோசனையாக உலமா கட்சி முன்வைக்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar