BREAKING NEWS

இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது என்றால் அதற்குரிய காரணங்களை இலங்கை அரசு அறிய வேண்டும்.

 விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதில் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட இந்தியா, இன்று இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளது என்றால் அதற்குரிய காரணங்களை இலங்கை அரசு அறிய வேண்டும்.



போருக்குப் பின்னரான இலங்கையின் வடக்கு  கிழக்கு மாகாணங்களில் சொல்லப்படும் அத்துமீறிய குடியேற்றங்கள், காணி கள் ஆக்கிரமிப்பு, சமயஸ்தலங்கள் அமைப்பு ஆகிய குற்றச்சாட்டுக்கள் விடயங்களில் இந்தியா ஏற்குமளவு இலங்கை நடந்து கொண்டிருக்க வேண்டும்.

அதே போல் வடக்கு கிழக்கில் எத்தகைய அசாதாரண சூழ்நிலைகளும் உருவாகாத நிலையில் அனைத்து இன மக்களையும் கவரும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இந்தியாவை ஒரு மத்தியஸ்தராக வைத்து செயற்பட்டி ருந்தால் இந்நிலை தோன்றிய pருக்காது என்றே நாம் கருதுகி றோம்.   

இலங்கை அரசாங்கம் வடக்கு  கிழக்கில் பாரிய அபிவிருத்திகளை செய்து வருகின்ற நிலையிலும் இந்தியா, இலங்கைக்கெதிராக செயற்பட்டுள்ளதன் காரணம் மேற்சொன்ன குற்றச்சாட்டு களாகவே இருக்க முடியும் என கருதலாம்.

    பொதுவாக இந்தியா மன்ன ராட்சியோ, ஜனாதிபதி ஆட்சி முறையோ கொண்ட நாடு அல்ல. மாறாக மக்கள் பிரதிநிதிகளால் ஆளப்படும் நாடாகும். இந்தநி லையில் மக்கள் பிரதிநிதிகளின் அழுத்தம் அரசுக்கு அதிகரிக்கும் போது ஆட்சியை தொடர்வதா இல்லையா என்ற நிலை வந்தால் தமது ஆட்சியை தக்க வைப்ப தையே எந்தவொரு கட்சியும் கருத்திற் கொள்ளும்.

    ஆகவே, இலங்கைக் கெதிராக இந்தியா ஆதரவளித் துள்ளமைக்கான எமது கவலையை தெரிவிப்பதோடு எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசின் மத்தியஸ்தத்துடன் வடக்கு  கிழக்கு, தமிழ் - முஸ்லிம் மக்களின் மனதை வெல்ல முயல வேண்டும்.

ஐ. நாவில் இலங்கைக்கெதிரான

பிரேரனை நிறைவேற்றப்பட்ட பின்னரான நாடு இன்றுள்ள சூழ்நிலை அவவளவு போற்றும்படியாக இல்லை. ஏகாதிபத்தியவாதிகளும், பிரிவனைவாதகளும் இலங்கையில் மீண்டுமொரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் அமெரிக்காவினால் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவே கொள்ள முடிகின்றது.

இந்நிலை தொடர்ந்தால் அது நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கும் பாரிய ஆபத்தைத் தோற்றுவிக்கலாம். அரசாங்கம் வடக்கு கழக்கில் உள்ள மேற்சொன்ன சறிய பிரச்சினைகளை தீர்த்தால் மேற்குலகுக்கு குற்றம் சாட்ட ஏதுமிருக்காது.  -Mubarak Abdul Majeed

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar