அமைச்சர் தொண்டமான் ராஜினாமா பற்றிய செய்திகளைப்பற்றி சக்தி ரிவி செய்தியில் ஸ்ரீரங்கா கிண்டலடித்தார். இது ஒரு ஏமாற்று வேலை என்றும் தெரிவித்திருந்தார்.
அதன் பின் 1994 முதல் ஆறுமுகன் தொண்டமான் ஆளும் அரசாங்கத்தின் பக்கமெல்லாம் மாறியதை சக்தி, நகைச்சுவையாக சித்தரித்து காட்டியது.
கேள்வி என்னவென்றால் 94 முதல் இந்த இந்த பதினேழு வரடங்களுள் மூன்று தடவைகளே தொண்டமான் மாற்று கட்சிகளுக்கு ஆதரவளித்துள்ளார். ஆனால் ஸ்ரீ ரங்காவோ ஒரு வருடத்துள் பல கோணங்களை எடுத்துள்ளார். 2010ம் ஆண்டு தன்னை ஐ தே க ஆதரவாளன் என காட்டி நுவரேலியா மக்களின் வாக்குகளை பெற்;றார். அதன் பின் ஒரு மாதத்தில் ஆளுந்தரப்புக்கு மாறினார். பின்னர் சில மாதங்களில் தான் தனித்து செயற்படப்போவதாக கூறினார். இன்னும் சில மாதத்தில் அரசாங்கத்தை எதிர்க்க ஆரம்பித்தார். கூடிய கதியில் பதவி ஏதும் கிடைத்தால் மீண்டும் அரசுக்கு ஆதரவளிப்பார். அதன் பின் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு.