BREAKING NEWS

உலமா கட்சியால் விடுக்கப்பட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தி


உலமா கட்சியால் விடுக்கப்பட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தி

மகளிர் தினத்தை முன்னிட்டு அலறி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் பாதுகாப்பு சம்பந்தமான மாநாடு வெற்றி பெற உலமா கட்சி வாழ்த்தியுள்ளதோடு மகளிரும் வாலிபர்களை கவர்ந்திழுக்கும் செயல்களிலிருந்து விடுபட வேண்டும் என்றும் கோரியுள்ளது.




இது சம்பந்தமக உலமா கட்சியால் விடுக்கப்பட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் மூலம்; அலறி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண் பிள்ளைகளைப் பாதுகாப்போம் எனும்  தலைப்பில்  முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளை (08.03.2012) நடை பெறும் விழா வெற்றி பெற நாம் வாழ்த்துகிறோம்.

இலங்கைப்பெண்களின் பாதுகாப்புக்காகவும், நலன்புரிகளுக்காகவும்  அர்ப்பணிப்புடன் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருவதையும் அதற்கான அமைச்சின் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ. எல். ஏம். ஹிஸ்புள்ளா அவர்களின் வேகமான, விவேகமான செயற்பாடுகளும் இது விடயத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பதற்கு உதவுவதையும் நாம் மகிழ்வுடன் கவனித்து வருகின்றோம்.

பெண்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்துவது என்பது மானிட சமூகத்தின் கடமையாகும். இக்கடமையை அரசாங்கம் சரிவர புரிந்து செயற்படுவது பாராட்டத்தக்கதாகும்.அதே போல் பெண்களும் தம்மைக்காத்துக்கொள்ளுமுகமாக தமது சூழல்களை புரிந்து அதற்கேற்ப தமது உடைகளில், நடைகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். வாலிபர்களை கவர்ந்திழுக்கும் வகையில் செயற்பட்டு விட்டு பின்னர் பாதுகாப்பு இல்லை என் கூறுகின்ற முரண்பாட்டு சிந்தனையிலிருந்து மகளிர் விடுபட வேண்டும் என்பதையும் மகளிர் தின செய்தியாக உலமா கட்சி சொல்லிக்கொள்ள விரும்புகிறது.

முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர். உலமா கட்சி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar