BREAKING NEWS

ஹஜ்ஜுக்கு போகு முன் வட்டிக்கு ஒத்துழைக்கும் ஹாஜிகள்.

 ஒருவர் ஹஜ்ஜுக்கு போவ தென்றால் மார்ச் மாதம் முடிவதற்கு முன் ரூபா 25000 முஸ்லிம்களின் சமய விவகார திணைக்களத்துக்கு வங்கி மூலம் செலுத்தி தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒக்டோபர் மாதமளவில் அவர் ஹஜ்ஜுக்கு செல்லலாம். அதுவும் விசா கிடைத்தாலேயே

 செல்ல முடியும். இல்லாவிடில் அவரது பணம் திணைக்களத்தால் திருப்பித்தரப்படும். அதாவது ஒரு ஹாஜியினால் வங்கியில் செலுத் தப்பட்ட பணம் சுமார் 10 மாதங்கள் வங்கியில் இருந்து வட்டியை உழைத்துக்கொடுக்கும். இதன் பின்தான் அந்த முஸ்லிம் ஹஜ் (?) ஜுக்கு செல்ல முடியும். இதுதான் ஹஜ் சம்பந்தமான நமது நாட்டின் தற்போதைய நடைமுறையாகும்.

    அப்படியானால்  25000 வீதம் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் செலுத்தினால் சுமார் இரண்டரைக்கோடி ரூபா வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. இதற்கு வங்கி பல லட்சத்தை வட்டியாக வழங்கும். இந்த வட்டிப்பணம் யாருக்கு போகிறது? முஸ்லிம் திணைக்களத்துக்கா அரசாங்கத்துக்கா என்பது தெரியவில்லை. யாருக்கு போனாலும் இத்தகைய வட்டிக்கு உதவி செய்து விட்டுத்தான் ஒரு ஹாஜி ஹஜ்ஜுக்கு செல்ல வேண்டியுள்ளது என்பது மிக மிக பரிதாபமாகும்.

அகில இலங்கை உலமா சபையே! முஸ்லிம்களின் மத விவகார திணைக்களமே! இதற்கு என்ன பதில்?

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar