BREAKING NEWS

அல் அக்ஸா மகா வித்தியாலயம், பொல்கஹவெல பாடசாலையின் வரலாறு

வடமேல் மாகாண குருநாகல் மாவட்டத்தில் தம்பதெனிய ஹத்பத்துவ உடபொல ஓத்தொட கோரளையில் (குடா ஓயா) சிற்றாற்றிற்கும், மகா ஓயா நதிக்கும், யோகமுவகந்த குன்றுக்கும் மத்தியில் பொல்கஹவெல நகரத்திற்கு அருகே ஒருலியத்தை கிராமம் எழிலாய் 
அமைந்துள்ளது. பொல்கஹவெலயில் தமிழ், முஸ்லிம்களின் கல்விக்காக கவிஞர் ஏ. இக்பாலின் மறுமலர்ச்சித் தந்தை எனும் நூலில் தேசிய வீரர் அறிஞர் சித்திலெப்பை அவர்களால் பாடசாலை ஒன்றை ஆரம்பித்ததாக சான்று கூறப்படுகின்றது. அந்தப் பாடசாலை இப்பகுதியில் பல இடங்களுக்கு இடமாற்றப்பட்ட போதிலும் இன்று சீ.சீ. தமிழ் வித்தியாலயமாக பொல்கஹவெலை நகரத்தில் சரித்திரம் படைத்து தலை நிமிர்ந்து நிற்கிறது.

ஒருலியத்தை கிராமத்தைச் சேர்ந்த சிறார்கள் அதிகமானோர் சீ.சீ. தமிழ் பாடசாலைக்கும், ஒரு சிலர் மடலகமையில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கும் சென்று கல்வி கற்று வந்தனர். எனினும் இப்பாடசாலைகள் இரண்டும் கிராமத்துக்குத் தூர அமைந்திருந்ததனால் எமது சிறார்கள் அங்கு சென்று கல்வி கற்பதில் ஊக்கம் காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதனால் 1961 ம் ஆண்டு காலப்பகுதியி;ல் ஒருலியத்தை கிராமத்தின் முதல் ஆசிரியரான மர்ஹ{ம் அல்ஹாஜ் ஏ.எம். மொஹிடீன் அவர்களும் மர்ஹ{ம் ஏ.ஆர். அப்துல் மஜீத், மர்ஹ{ம் எம்.சீ.எம். ஜெஃபர், மர்ஹ{ம் ஏ.எச்.எம். அபுல்ஹசன் ஆகியோர் இங்கு பாடசாலை ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை ஊர் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

அதற்கான முயற்சிக்காக சேர். ராசிக் பரீத் அவர்களின் அகில இலங்கை சோனகர் சங்க பொல்கஹவெல கிளை உறுப்பி னர்களினதும் ஊர் மக்களினதும் அனுசரனையுடன் இப்பணி முன்னெடுக் கப்பட்டது. அதன்படி அன்றைய ஆளும் கட்சி  பொல்கஹவெல தொகுதி பாராளு மன்ற உறுப்பினர் கௌரவ ஸ்டீவன் சமரக்கொடியின் உதவியைக் கொண்டு பாடசாலையை அமைக்க தீர்மானித்தனர். இந்நிலையில் ஒருலியத்தை முஹியத்தீன் ஜும்மாப் பெரிய பள்ளிவாசலை அமைக்க மர்ஹ{ம் சின்ன மரிக்கார் ஐசி லெப்பை அவர்களால் வழங்கப்பட்ட காணியில், பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த குர்ஆன்மத்ரஸாவில் பாடசாலையை ஆரம்பிக்க அவரின் மகனாராகிய அன்றைய பள்ளி  பிரதம நம்பிக்கையாளர் மர்ஹ{ம் ஐ.எல். நாகூர் அடுமை (ளு.யு.N.யு. காலித்) அவர்கள் ஒப்புதலை வழங்கினார். அதையடுத்து 1962 ம் ஆண்டு ஜனவரி 02 ந் திகதி குஃஒருலியத்த முஸ்லிம் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வித்தியாலயத்தை ஆரம்பித்துவைக்க வித்தியாதரிசி ஜனாப் ஏ.எச்.எஸ். மொஹமட் அவர்கள் சமுகமளித்தார். இப்பாடசாலை முதல் அதிபராக ஜனாப் ய+.எல்.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்ட போதும் அவர் சமுகமளிக்காததால், அப்பொறுப்பை எமது கிராமத்தைச்சேர்ந்த அல்ஹாஜ் எம்.ஜே. நாகூர் அடுமை (ஜே.எம். பளீல்) அவர்களிடம் வித்தியாதரிசி சம்பவத் திரட்டுப்புத்தகத்தில் பதிந்து பாடசாலைப் பொறுப்பை கையளித்தார்.   அன்றைய தினம் முதலாம் வகுப்புக்கு ஆண்கள் 08 பேரும் பெண்கள் 17 பேரும் ஆக மொத்தம் 25 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப ;பட்டனர். இவர்களுள் முதல் மாணவராக அல்ஹாஜ் ஏ.எம்.எம். ஷைப்தீன் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 03 ந் திகதி அதிபராக நியமனம் பெற்ற ய+.எல்.எஸ். ஹமீட் தனது பாடசாலை நிருவாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதுடன் 5ஆம் திகதி இடமாற்றமும் பெற்றுச்;;சென்றார்.1962 ஆம் ஆண்டு ஜனவரி 05ந் திகதி வெலிகா மத்தைச் சேர்ந்த ஜனாப் எஸ்.ஏ.எம். மௌலானா அவர்கள் தலைமை யாசிரியராக கடமை ஏற்றார். அவரது கால கட்டத்தில் 5ம் ஆண்டுவரை வகுப்புக்கள் நடைபெற்றன. 1962 ம் ஆண்டு ஜனவரி 02 ந் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு 1962.02.16 ல் பெரு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்குபிரதம அதிதியாக கலகெதர தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் அப்துல் ஜெப்பார் அவர்களும், சிறப்பு விருந்தினராக பொல்கஹவெல தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ திரு. ஸ்டீவன் சமரக்கொடி அவர்களும் கல்வி அதிகாரி திரு. சேனாநாயக்க அவர்களும் கலந்து கொண்டனர்.  இவ்விழாவைத் தொடர்ந்து பாடசாலையின் ஆசிரியர் தேவை ப+ர்த்தி செய்யப்பட்டன. கலுகல்ல அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறப்புவிழாக்கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றிய தம்பதெனியத் தொகுதி பாராளுமன்ற பிரதிநிதியும் அமைச்சருமான சு.னு.  சேனாநாயக்க அவர்கள் ஜனாப் எச்.எல்.எம். புஹாரி அவர்களின் புகைப்படம் ஒன்று இக்கட்டடத்தில் தொங்கவிடப்பட வேண்டும் என்று புகழ் மாலை சூட்டினார்.


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar