BREAKING NEWS

தம்புள்ள பள்ளி மீதான தாக்குதலுக்கு எதிராக இலங்கை உலமா சபை ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

தம்புள்ள கைரியா ஜும்ஆ பள்ளி மீதான இனவாதிகளின் தாக்குதலை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இதற்கெதிரான ஆர்ப்பாட்டமொன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சி ஸ்தாபகர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
 தம்புள்ள சம்பவத்தை  சாதாரணமான ஒன்றாக கணிப்பிட முடியாது. அந்த வகையில் இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இல்லாமல் மத குருக்களே இருப்பதால் இவற்றுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் தகமை அ. இ. ஜம்இய்யத்துல் உலமாவுக்கே உண்டு.
    முஸ்லிம் அரசியல் கட்சிகளை பொறுத்த வரை அவை அனைத்தும் அரசுடனேயே உள்ளதனால் ஒரு கண்டன அறிக்கை விடுவதை தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வகையில் ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் அமைதியான எவருக்கும் இடைய+று இல்லாத வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இது விடயம் ஊடக மயப்படுத்தப்படுவதன் மூலமே அரசாங்கத்தின் கவனத்தை திருப்ப முடியும். 

வெள்ளிக்கிழமைகளில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களை ஏற்படுத்தி மக்களுக்கு அசெகரியத்தை ஏற்படுத்துவதை விடுத்து உலமா சபையின் ஏற்பாட்டில் கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் இத்தகைய அமைதி ஆர்ப்பாட்டங்களை நடத்தி சேதமாக்கப்பட்ட பள்ளி வாயலை மீண்டும் கட்டித்தர கோருகின்ற ஜனநாயக வழி தவிர வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. 


முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar