BREAKING NEWS

தம்புள்ள பள்ளிவாயலை வேறு இடத்தக்கு மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிக்கை உலமா கட்சியால் நிராகரிப்பு

தம்புள்ள பள்ளிவாயலை வேறு இடத்தக்கு மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் அறிக்கை ய+தர்கள் பைத்துல்முகத்தஸை மாற்றச்சொல்வது போன்று மொத்த முஸ்லிம்களையும்  அவமானப்படுத்தும் கருத்தாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது, எம்மைப்பொறுத்த வரை தம்புள்ள பள்ளிவாயலும் புனிதமானது என்பதால் அது அதே இடத்திலேயே இருக்க வேண்டும். அதையும் மீறி அது உடைக்கப்படுமானால் அது ஜனாதிபதிக்கும், அரசுக்கும் பௌத்த சமயத்துக்குமே அவமானமாக அமையும். ஜனாதிபதிக்கு ஆதரவான கட்சி என்ற வகையில் இச்சம்பவங்களையிட்டு நாம் கவலைப்படுகிறோம், வெட்கப்படுகிறோம். 
இந்தியாவின் அயோத்தி பள்ளிவாயல் உடைக்கப்பட்டமை இந்தியாவின் மதசுதந்திரத்துக்கு ஏற்பட்ட அவமானம் போல் இதுவும் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறோம். அவ்வாறு பள்ளிவாயல் உடைக்கப்படுமாயின் அதற்கெதிராக முஸ்லிம்கள் நீதி மன்றம் செல்ல தயாராக  வேண்டும். அதே போல் தேசப்பற்றை காட்ட ஜெனீவா வரை சென்ற ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர்கள் இந்த அநியாயத்துக்கு எதிராக தமது சமயப்பற்றைக்காட்ட ஜனநாயக ஆர்ப்பாட்டங்களை கொழும்பில் முன்னெடுக்க வீதிக்கு வேண்டும். மூடிய அறைகளுக்குள் இருந்து கொண்டு கூட்டங்கள் நடத்துவதால் பயனில்லை என்பதை சொல்லிவைக்கிறோம்.
பள்ளியை  இடம் மாற்றும் விடயத்தில் எத்தகைய விட்டுக்கொடுத்தலுக்கும் எவரும் வரக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். அவ்வாறு இடங்கொடுத்தால் அம்பாறை நகர பள்ளி வாயல் போன்று பல பள்ளிவாயல்களை அகற்ற வேண்டிய நிலை வரலாம் என்று எச்சரிக்கிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar