BREAKING NEWS

தம்புள்ளை விவகாரம் முடிந்துவிட்டதாகக் கூறி முஸ்லிம் சமூகத்தைத் தவறாக நடத்துகிறார் ஹக்கீம் உலமா கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை முடிவடைந்து விட்டது என எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அமைச்சர் ரவ+ப் ஹக்கீம் கருத்து வெளியிடுகின்றார் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் கேள்வி எழுப்பியுள்ளார்.

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை முடிவடைந்து விட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதியமைச்சர் ரவ+ப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளமை தொடர்பில் விவரிக்கையிலேயே முபாறக் மௌலவி மேற்கண்டவாறு தெரிவித்தார். தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் அகற்றப் படாது என உத்தரவாதமளிக்கப்பட்டால் மாத்திரமே பிரச்சினை தீர்ந்துவிட்டது என அர்த்தம். ஆனால், அரச தரப்பு இன்னும் அவ்வாறானதொரு உறுதிமொழியை வழங்கவில்லை. அப்படியானால், எந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் அமைச்சர் ஹக்கீம் பள்ளிவாசல் பிரச்சினை முடிந்துவிட்டது எனக் கூறுகின்றார்? இவ்வாறான கருத்துகளை முன்னெடுத்து அவர் முஸ்லிம் சமூகத்தைத் தவறாக வழிநடத்துகின்றார்.
அமைச்சர் ஹக்கீம் அவ்வாறு கூறினாலும், தம்புள்ளை தேரர்கள் முற்றிலும் வித்தியாசமான கருத்துக்களையே முன்வைக்கின்றனர் - என்றும் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

சுடர் ஒளி 8-5-2012

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar