BREAKING NEWS

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலையீடு அவசியமற்றது

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் முயற்சிகளை  மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதனை பலரும் வரவேற்றிருந்தாலும் த. தே. கூட்டமைப்பை சேர்நத சுரேஷ் பரேமச்சிந்திரன் மு. காவின் தலையீட்டை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

தமிழ் கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டு வர மு. கா முயற்சிப்பது வெளித்தோற்றத்தில் நன்றாக தெரிநி;தாலும் முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை மு. கா இது விடயத்தில் தலையிடாமல் இருப்பதே சமூகத்துக்கு நன்மை தருவதாக அமையும்.

மு. கா வின் பேச்சைக்கேட்டு  தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வந்தபின் இனப்பிரச்சினை தீர்வு அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரை இழுத்தடிக்கப்படுமாயின் சில வேளை த. கூ பாராளுமன்ற தெரிவிக்குழுவிலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டால் கூட்டமைப்பை  தெரிவுக்குழுவுக்கு கொண்டு வந்த மு. கா மீதே பழி விழும். இது தமிழ் முஸ்லிம் மக்களிடையே மனக்கசப்பை தோற்றுவிக்கலாம்.

    சிங்கள இனவாதம் முஸ்லிம்களுக்கெதிராக வளர்ந்து வரும் இன்றைய நிலையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையின்  அவசியம் உணரப்பட்டு வரும் இந்நிலையில் தமிழ் மக்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளி விடும் முயற்சிகளுக்கு மு. கா துணை போவது சமூக நலனுக்கு குந்தகம் விளைவிக்கலாம்.

ஆகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதா இல்லையா  என்பதை சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை த. கூட்டமைப்பிடம் விட வேண்டும். இது விடயத்தில் மு. கா மூக்கை நுளைப்பதை தவிர்த்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் சமூகம் சார்ந்த நலன்களை எவ்வாறு வென்றெடுக்கலாம் என்பதுதான் மு. காவின் இன்றைய தேவையாகும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar