BREAKING NEWS

முஸ்லிம்கள் சிங்களவருக்கு முன் இந்நாட்டின் முதல் ப+ர்வீகம் -இனாமலுவே தேரருக்கு உலமா கட்சித்தலைவர் பதில்

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்பது இலட்சக்கணக்கான வருடங்களைக்கொண்டதே அல்லாமல் அவர்கள்  அனைவரும் அறபு மக்களின் வாரிசுகள் என்பது அப்பட்டமான கற்பனையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

இனாமலுவே சுமங்கள தேரரின் முஸ்லிம்கள் பற்றிய தவறான அண்மைய கருத்துக்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முபாறக் மௌலவி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையை பொறுத்த வரை சிங்களவர்களின் வரலாறு என்பது சுமார் 2500 வருடங்களுக்கு முன்பே ஆரம்பமாவதாக சிங்கள மக்களின் வரலாற்றுக்குரிய ஆதாரப+ர்வ நூலான மஹா வம்சம் கூறுகிறது. அத்துடன் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு வந்த விஜயன் ஒரு பௌத்தனாக வரவில்லை. ஏனெனில் விஜயனின் வரவிற்கு பின்பே இலங்கைக்கு பௌத்த மதம் வந்ததாக மஹா வம்சம் கூறுகிறது. விஜயனின் வரவுக்கு முன்பிருந்தே இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். விஜயன் மணமுடித்த குவேணி ஒரு பௌத்த பெண்ணாகவோ அல்லது இந்துவாக வாழ்ந்ததாகவோ ஆதாரம் இல்லை.

இந்த நிலையில் மனித வரலாற்றை ஆராயும் போது முதல் மனிதன் ஆதம் இலங்கையில் கால் பதித்ததாகவே சமயங்களும் மானுட வரலாறும் தெளிவாக கூறுகின்றது. அதே போல் ஆதம் ஒரு முஸ்லிமாக வாழ்ந்ததாக குர்ஆன் மிகத்தெளிவாக கூறுகிறது. சிங்களவர்களுக்கு எவ்வாறு மஹாவம்சம் ஆதார நூலோ அதே போல் சில வேளை அதனை விடவும் குர்ஆன் முஸ்லிம்களின் ஆதார நூலாக முஸ்லிம்களால் கொள்ளப்படுகிறது. ஆதத்தின் வரலாறு என்பது சுமார் நாற்பது லட்சம் வருடங்களுக்கு முந்தையது என இன்றைய விஞ்ஞானம் உறுதியாக கூறுகிறது. அந்த வகையில் ஆதத்தின் பரம்பரையான முஸ்லிம் சமூகம் இலங்கையில் பல லட்சக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகிறது என்பதே உண்மையாகும்.

இவ்வாறு ஆதத்தின் பரம்பரையில் வந்த முஸ்லிம் பெண்ணாகவே நான் குவேணியை பார்க்கிறேன். அவள் வேடுவ பெண்ணான போதும் ஆதி மனிதன் முஸ்லிமான ஆதத்தின் பரம்பரை வேடுவர்களாகவே இங்கு வாழ்ந்தார்கள். இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்களே மத்திய கிழக்கு போன்ற உலக நாடுகளுக்கு சென்றார்களே தவிர மத்திய கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் வந்தார்கள், என்பது கற்பனையானதாகும். சுமார் ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் பிறந்த முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை உலகுக்கு கொண்டு வரவில்லை. மாறாக களங்கப்படுத்தப்பட்டிருந்த இஸ்லாத்தை பதுப்பிப்பதற்காக இறைவனின் இறுதி தூதராகவே வந்தார்கள். ஒரு சில அறபு வியாபாரிகள் முஹம்மது நபிக்கு பின் இலங்கைக்கு வந்தார்கள் இங்கு திருமணமும் முடித்தார்கள். சிலர் இங்கு தங்கியிருக்கலாம். சிலர் தமது இலங்கை மனைவியை அழைத்துக்கொண்டு தமது நாடுகளுக்கு சென்றிருக்கலாம். இங்கே தங்கியவர்கள் எற்கனவே இங்கிருந்த முஸ்லிம் பரம்பரையுடன் முஹம்மது நபியை இறுதித்தூதராக அவர்களையும் ஏற்கச்செய்து அவர்களுடன் வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மையான வரலாறாகும். 

ஆனாலும் பிற்காலத்தில் இலங்கை வந்த அறபிகள் சிங்கள பெண்களை கொள்ளையடித்தார்கள் என தேரர் கூறுவதன் மூலம் சிங்கள பெண்களைத்தான் இவர் கேவலப்படுத்தியுள்ளார். அறபியைக்கண்டு அதுவும் கடலோடிகளாக வருபவர்கள் இளைஞர்களல்ல, முதியவர்களே, அத்தகையவர்களில் மயங்கிய சிங்கள பெண்கள் அவர்களை மண முடிக்கிறார்கள் என்றால் அந்த மயக்கம் அவர்களின் இனத்து ஆண்களிடம் அவர்களுக்கு ஏற்படவில்லை என்பதே பொருளாகும். இவ்வாறு சிங்கள பெண்களை கேவலப்படுத்துவது தேரருக்கு சந்தோசமாக இருக்கலாம். ஆனால் இலங்கை முஸ்லிம்கள் சிலரின் தாய்மார்களான அந்த சிங்கள பெண்களை இவர் கேவலப்படுத்துவதை எம்மால் எற்றுக்கொள்ள முடியாது.

இந்நாட்களில் கூட இலங்கைக்கு சுற்றுலா வரும் பல அறபிகள் சிங்கள பெண்களை மண முடித்து சில காலத்துக்கு வைத்திருந்து விட்டு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிங்கள பெண்கள் அறபிகள் மீது மோகம் கொள்வதற்கு அவர்களின் சுத்தமும் வீரியமிக்க ஆண்மையும் நல்ல நடத்தையும், பெண்களை மதிக்கும் உயர் பண்பும் காரணமாக இருக்கலாம்.  இந்த ரகசியத்தை சிங்கள பெண்களாலேயே தெளிவு படுத்த முடியுமே தவிர துறவியான தேரரால் புரிந்து கொள்ள முடியாது.

ஆகவே சிங்களவர்கள்தான் இலங்கைக்கு வந்தவர்களே என்பதுவும் முஸ்லிம்களே இந்நாட்டின் முதல் ப+ர்விகம் என்பதையும் ஆணித்தரமாக சொல்லி வைக்கிறோம்.


Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar