BREAKING NEWS

மணப்பெண்ணிடம் சீதனம் (பணம்) நகைகள்

       கடந்த வார வார வெளியீடு ஒன்றில்  13-5-2012 ல் மணப்பெண்ணிடம் வீடு கேட்பது ஹறாம் என என்.வி.ஆர். நூர்தீன் என்பவர் எழுதியுள்ளார். சமூகத்தில் நடைபெறும் சீதனக் கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பிய நிலையில் இவர் இக்கட்டுரையை எழுதியுள்ளார். இவரது சமூகப்பற்று பாராட்டுக்குரியதுதான் ஆனாலும் இஸ்லாத்தில் எதையும் திடீரென்று இது ஹராம் இது ஹலால் என ஆதாரமில்லாமல் சொல்வதற்கு எந்த முஸ்லிமுக்கும் உரிமையில்லை.
            ‘உங்களது நாவுகள் வர்ணிப்பதற்கெல்லாம் இது ஹராம், இது ஹலால் என்று ஏன் கூறுகின்றீர்கள்’ என இறைவன் குர்ஆனில் கேட்கின்றான். இந்த வகையில் மணப்பெண்ணிடம் வீடு, நகை வேண்டும் என கேட்பது இஸ்லாமிய பண்பல்ல என கூற முடியுமே தவிர இதனை ஹராம் என்று கூறமுடியாது.
             அத்துடன் மேற்படி கட்டுரையில் ‘நபி(ஸல்) அவர்கள்… மணப்பெண்ணிடம் சீதனம் (பணம்) நகைகள்;;;;;;;;;;;;;;;;;;;இ வீடுகள் கேட்பது கூடாது (ஹராம்) என்றும் தடைசெய்துள்ளார்கள்’ என கூறியுள்ளார். நாம் அறிந்த வரை இப்படியொரு ஹதீஸ் உள்ளதாக தெரியவில்லை. இவ்வாறு நபியவர்கள் ஹராம் என கூறியதாக எந்த ஹதீஸ் நூலில் இடம்பெற்றுள்ளது என்பதை விபரங்களோடு தருமாறு இவரை கேட்டுக்கொள்கின்றேன்.
              சமூகத்தில் நடக்கும் மோசமான செயலை கண்டிக்க வேண்டும் என்பதற்காக நபியவர்கள் சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறுவது பெரும் பாவமாகும்.
              இஸ்லாம் மணப்பெண்ணுக்கு மகர்; கொடுத்து திருமணம் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது போல் பெண்ணுக்கு அவளது தந்தை சீதனமாக வீடு, நகை போன்றவற்றை வழங்கினால் அதனை பெற்றுக்கொள்வதை இஸ்லாம்; தடைசெய்யவில்லை. ஒரு பெண்ணுக்கு வீடு இருந்தால் அவளை முடித்த அவள் கணவன் அவள் வீட்டில் வாழலாம். இதற்கு  இஸ்லாத்தில் தடை ஏதும் இல்;லை. நபி(ஸல்) அவர்கள் கதீஜாவை மணமுடித்து அவர்களது வீட்டிலேயே வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.
              அத்துடன் மதீனாவில் நபியவர்கள் வாழ்ந்த போது நபிகளாரின் வீட்டில் மனைவிகள் அனைவரும் ஒன்றாக வாழவில்லை. மாறாக ஒவ்வொரு மனைவியும் அவரவர் வீடுகளிளேயே வாழ்ந்தார்கள். நபியவர்கள் அங்கு சென்று தங்குவார்கள்.
              ஆக, மணமகன், மணமகள் வீட்டில் தங்குவது குற்றமானதொன்றல்ல. இவ்வாறு நான் கூறுவதற்காக சீதனக்கொடுமையை ஆதரிக்கிறேன் என்று பொருளல்ல. சீதனம் வாங்குதல் என்பது வேறு, சீதனம் கேட்டு கொடுமை செய்வது என்பது வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
               சீதனம் என்பது அன்பளிப்பாகும். அன்பளிப்பைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவது கப்பம் கேட்பதற்கு ஒப்பானதாகும். இந்த வித்தியாசத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
               இஸ்லாம், மணமகன் மணமகளுக்கு கொடுக்கும் மகருக்கான தொகையை இவ்வளவு என நிர்ணயிக்கவிவ்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுக்கலாம். அதே போல் ஒரு தந்தை மணமகளான தனது மகளுக்கு எவ்வளவும் சீதனமாக கொடுக்கலாம். எதையும்; கொடுக்கலாம். அது அவரது வசதியை பொறுத்த விடயம். அதை அவளும் அவளது கணவரும் அனுபவிப்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் நேரடியாக எந்தத்தடையும் வரவில்லை.
தகுதிக்கு மீறி சீதனம் கொடுப்பது அல்லது தருவதாக சமாளிப்பு வாக்குறுதி வழங்கல் என்பவைதான் தவிர்க்கப்பட வேண்டும்.
                 ஆனால் சீதனமாக இது வேண்டும் அது வேண்டும் என மனைவியை கணவன் கொடுமைப்படுத்துவதோ அல்ல கணவனை மனைவி கெடுமைப்படுத்துவதோ கூடாததாகும். இது ஒருவர் பொருளை பலாக்காரமாக அபகரிக்கும் சட்டத்தின் கீழ் வருகிறது. ஆகவே சீதனம் இனாமாக பெறுதல் என்பது வேறு பலாக்காரமாக கேட்டு கொடுமைப்படுத்துவது என்பது வேறு, இதனை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

இது பற்றிய வாசகர்களின் கருத்துக்களை எதிர் பார்க்கிறோம்.
aljazeeralanka@gmil cov.                            

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar