BREAKING NEWS

ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத் போன்றவை முன்வருவதன் மூலம் மட்டுமே கிழக்கில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும்


முஸ்லிம்கள் எதிர் நோக்கும் இனவாத சவால்களுக்கு ஜனநாயக ரீதியலான தேர்தல் மூலம் நல்ல பதிலை வழங்கும் வகையில்; உலமா கட்சியுடன் கூட்டணி சேர்த்து தேர்தலுக்கு முகம் கொடுக்க  ஜம்இய்யத்துல் உலமா, ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாஅத் போன்றவை முன்வருவதன் மூலம் மட்டுமே கிழக்கில் வசந்தத்தை ஏற்படுத்த முடியும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் nரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் சமூகத்தின் நலன்கள் பற்றி சிந்திக்காது தமது பதவிகளை மட்டுமே சிநடதித்து அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து கிழக்கு தேர்தலில் குதிக்கவுள்ள முஸ்லிம் கட்சிகளை அழைத்து ஒற்றுமையாக செயற்படும் படி ஜம்இய்யத்துல் உலமா உபதேசம் செய்திருப்பது வேடிக்கையானதாகவே தெரிகிறது.  முஸ்லிம்களின் இன்றைய தேசிய பிரச்சினைகளு;கு சுதந்திரமாக அழுத்தம் கொடுக்க வேண்டுமாயின் முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு தமக்குள் “முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பொ”ன்றை ஏற்படுத்தி அக்கூட்டமைப்பு  கிழக்கில் போட்டியிடுவதன் மூலமே கிழக்கு முஸ்லிம்களையும், ஏனைய மாகாண முஸ்லிம்களையும் அடிமைத்தளத்திலிருந்து மீட்க முடியும் என்பதே உலமா கட்சியின் தெளிவான நிலைப்பாடாகும். முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் ;இத்தகையதொரு கூட்டமைப்பை ஏற்படுத்த உலமா சபை முயன்றிருந்தால் அது பாராட்டுக்குரியதாக இருந்திருக்கும். அதனை விடுத்து நோன்பு காலத்தில் ஒருவரையொருவர் தூற்ற வேண்டாம் என உபதேசித்திருப்பது சிறுபிள்ளைத்தமனமானதாகும். இது கூட தெரியாத நிலையில்தான் முஸ்லிம் கட்சிகள் உள்ளன என ஜம்இய்யத்துல் உலமா நினைத்திருப்பது அதைவிட வேடிக்கையானதாகும். ஆனாலும் இந்த உபதேசத்தை தஃவாவில் ஈடுபடும் உலமாக்களுக்குத்தான் முதலில் செய்ய வேண்டும். 

என்னதான் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து போட்டியிட்டு வென்றாலும் யாருக்கு என்ன பதவி  என்பதில் தேர்தலுக்குப்பின் பாரிய அசிங்கமான சண்டைக்காட்சிகளை முஸ்லிம் கட்சிகளுக்கிடையில்  காணலாம். அந்தச்சண்டை முடிவடைவதற்கிடையில்   பல பள்ளிகளையும், காணிகளையும் முஸ்லிம் சமூகம் இழந்து நிற்கும் நிலையும் வரலாம்.

ஆகவே முஸ்லிம் கட்சிகளை அழைத்து உபதேசம் செய்து நேரத்தை வீணடிப்பதை விடுத்து எம்மோடு ஜம்இய்யத்துல் உலமா மற்றும் தஃவா இயக்கங்கள் இணைந்து தேர்தலில் குதிப்பதன் ஊடாகவே சுய நல அரசியல்வாதிகளிடமிருந்து சமூகத்தை காப்பாற்ற முடியும் என சொல்லிக்கொள்கிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar