BREAKING NEWS

முஸ்லிம் அரசியல்வாதிகள் பள்ளிவாயல்கள் ப+ட்டப்புடுவதற்கு எதிராக இன்னமும் சட்டத்தை நாடாமல் இருப்பது முஸ்லிம் சமூகத்துக்கும் சமயத்துக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்


சட்டத்துறையில் முதுமாணி பெற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் பள்ளிவாயல்கள் ப+ட்டப்புடுவதற்கு எதிராக இன்னமும் சட்டத்தை நாடாமல் இருப்பது முஸ்லிம் சமூகத்துக்கும் சமயத்துக்கும் செய்யும் பெரும் துரோகமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,


நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமுமாக பள்ளிவாயல்கள் ஆக்கிரமி;கப்பட்டு ப+ட்டப்பட்டு வருவது முஸ்லிம் சமூகத்தை பெருத்த அவமானத்துக்குள்ளாக்கியள்ளது. இந்த நிலையில் இது விடயங்களில் எவ்வாறான அரசியல் நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாத நிலையில் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சித்தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமது உரிமையை பெற்றுத்தருவார்கள் என்று நம்பிய முஸ்லிம்கள் அனாதைகளைப்போல் செய்வதறியாது திகைப்பில் உள்ளனர். 

பிரச்சினைகள் என்று வரும் போது இந்த நாட்டின் ஏனைய இனங்கள் சட்டத்தையும் நீதியையும் உடனடியாக நாடுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ தமது கட்சித்தலைவர்கள் சட்டத்துறையில் முதுமாணி பெற்றுள்ளார்கள் என்பதை பெருமையாக மட்டும் நினைக்கின்றதே தவிர அத்தகைய சட்டப்படிப்பு பள்ளிவாயல்கள் தாக்கப்படுவதில் எந்த வித பிரயோஜனத்தையும் தராதிருப்பதைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது கவலைக்குரிதாகும். எனவே இது விடயங்களில் சட்டத்துறையை பயன்படுத்துவதற்கான அழுத்தத்தை சமூகமதான்; இவர்களுக்கு கொடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரங்களுக்காக மினக்கட்டு பணம் செலவு செயது கிழக்கக்கு படையெடுக்க முடியும் என்றால் ஏன் இப்பிரச்சினைக்காக சட்டத்தை நாடுவதற்கு சிறிது நேரத்தை செலவு செய்யக்கூடாது என கிழக்கு மக்கள் குரல் எழுப்ப வேண்டும். 

இன்று முஸ்லம்களுக்கு தேவை அடுத்தவர்களை நோக்கி குரல் எழுப்புவதல்ல, நமது கையாலாகாத முஸ்லிம் தலைமைகளுக்கெதிராக குரல் எழுப்புவதே இன்றைய தேவையாகும். ஆகவே பள்ளிவாயல்கள் மூடப்படுவதற்கு எதிராக முஸ்லிம் சட்ட முதுமாணிகள் சட்டத்தை நாட வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது. 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar