BREAKING NEWS

மின்சாரத்தை பெற்றுத்தரக்கூட நடவடிக்கை எடுக்கத்தெரியாத ஹக்கீமும் அதாவுள்ளாவும்


மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அம்பாரை மாவட்ட மக்களுக்கு அதனை உடனடியாக பெற்றுத்தர முடியாத அமைச்சரவை அந்தஸ்துள்ள ஹக்கீமும், அதாவுள்ளாவும் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுத்தருவார்களா என்பதை முஸ்லிம் சமூகம் உணர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 


கடந்த வருட நோன்பில் கிறீஸ் ப+த பீதியில் முஸ்லிம்கள் ரமழான் இரவை சரிவர நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இந்த நோன்பில் ஹக்கீம், அதாவுள்ளா என்ற இரண்டு தரகர்களால்; முஸ்லிம் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அம்பாரை மாவட்டத்தில் மின்சாரம் இல்லாததன் காரணமாக மக்கள் இரவுத்தொழுகையை சரிவர நிறைவேற்ற முடியாமல் உள்ளதோடு தண்ணீர் பிரச்சினைக்கும் முகம் கொடுக்கிறார்கள். இத்தனைக்கும் அதாவுள்ளாவும், ஹக்கீமும் தத்தமது சுயநல அரசியலுக்காக அம்பாரை மாவட்டத்தில் நின்று மோதிக்கொள்கிறார்களே தவிர அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு மின்சாரத்தைப்பெற்றுத்தர இவர்களால் முடியவில்லை. 

மின்சார ஊழியர் வேலை நிறத்தம் செய்யும் நிலை கொழும்பில் ஏற்பட்டிருந்தால் இத்தனை நாட்கள் விட்டிருப்பார்களா? நோன்பு காலத்தில் அதுவும் பெரும்பாலான முஸ்லிம்கள் எதிர் நோக்கும் 27ம் நாளை அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் இருட்டில் நிறைவேற்ற வேண்டிய துர்ப்பாக்கியத்தை இந்த அமைச்சர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.  சுhதாரண மின்சாரத்தை  பெற்றுத்தரக்கூட நடவடிக்கை எடுக்கத்தெரியாத ஹக்கீமும் அதாவுள்ளாவும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என ஒரு முஸ்லிம் எண்ணுவானாகில் அவனைப்போன்ற முட்டாள் இருக்க முடியாது. 

இத்தகைய கையாலாகாத அமைச்சர்களுக்கு அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் பாடம் படிப்பிப்பதாயின் மரத்துக்கோ வெற்றிலைக்கோ வாக்களிப்பதை இந்த தேர்தலில் முற்றாக தவிர்க்க வேண்டும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar