BREAKING NEWS

வடக்கு-கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்க தேரேர் ஸ்ரீ போதி தக்சினாராமாதிபதி சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம்


-          இர்ஷாத் றஹ்மத்துல்லா -
எதிர் கட்சியிலிருந்து அரசியல் செய்யும் சில அரசியல்வாதிகள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அமைச்சருமான் றிசாத் பதியுதீனுக்கு எதிரான இனவாத துவேஷ நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும்,இனம்,மதம்,மொழி கடந்து சகலருக்கும் பணியாற்றுபவர் அமைச்சர் என்பதை தமது அமைப்பு உறுதிப்படுத்துவதாக வடக்கு-கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்க தேரேர் ஸ்ரீ போதி தக்சினாராமாதிபதி சியம்பலாகஸ்வெவ விமலசார நாயக்க தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினராகவும்,அதன் பின்னர் அமைச்சராகவும் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அமைச்சர் றிசாத் பதியுதீன்,வன்னி மாவட்ட சகல மக்களுக்கும் அளப்பறிய பணிகளை இனம்,மதம்.கடந்து செயலாற்றிவருவதை தங்களது கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் அக்கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிக்கு  அனுப்பி வைத்துள்ள கடித்த்தில் விமலசாரநாயக்க தேரர் தலைமையில் மேலும் ஏழு பௌத்த மத தலைவர்கள் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
பயங்கரவாதம் நிலவிய காலத்திலும்,மக்கள் இடம் பெயர்வுகளை சந்தித்த போதும்,அம்மக்களை மீள்குடியேற்றும் போதும் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல்களை துச்சமாக மதித்து தமது நேர்மையான பணியினை முன்னெடுத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
2005 ஆம் தொடக்கம் உங்களுடன் நெருக்கமாக அமைச்சர் பணியாற்றுவதாலும்,தங்களது அரசாங்கத்தின் முக்கிய அமைச்சுப் பதவியில் இவர் இருப்பதாலும்,அவருக்கு எதிராக சில எதிர்  கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள்,இவரது அரசியல் செயற்பாட்டை முடக்குவதற்கும்,அதனை தடுத்து நிறுத்துவதற்கும் முயற்சிப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
எனவே அமைச்சர் றிசாத் பதியுதீன் மூலம் எமது பிரதேசம் பாரிய நன்மைகளை பெற்றுவருவதால்,தொடர்ந்தும் அவரது சேவைகளை இடைவிடாது எமது நாட்டு மக்களும்,வன்னி மாவட்ட சகல சமூகங்களும் பெற்றுக் கொள்ள  தங்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைப்பதாகவும் அக்கடித்த்தில் வடக்கு-கிழக்கு பிரதம சங்க நாயக்கர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar