BREAKING NEWS

வெற்றிலை சின்னத்துக்கும் தமது சுயநலனுக்காக அரசுக்கு முட்டு கொடுக்கும் முஸ்லிம் காங்கிரசின் மரத்துக்கும் நாம் வாக்களிக்க முடியாது.


பள்ளிகளை அசிங்கப்படுத்துவோரில் ஒருவரைக்கூட கைது செய்யாத இந்த அரசாங்கத்தின் கையில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை கொடுக்கக்கூடாது என்பதாயின் மரத்துக்கோ, வெற்றிலைக்கோ முஸ்லிம்கள் வாக்களிக்காமல் இருப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியமானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடன் நடைபெற்ற நிகழ்விலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசாங்கத்தின் மீதான வெறுப்பை இன்று கிழக்கு மாகாண முஸ்லிம்களிடம் நாம் அதிகம் காண்கிறோம். இது உண்மையான யதார்த்தமான உணர்வாகும். நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் முஸ்லிம்கள் மத்தியில் அவ்வாறான மனோ நிலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் அரசாங்கத்துக்கான தமது எதிர்ப்பை அரசாங்கத்துக்கு முட்டு கொடுத்துக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு போதும் முடியாது என்ற சிந்தனைத்தெளிவை இன்னமும் முஸ்லிம்கள் பெறாமலிருப்பது கவலை தருகிறது.
இன்றுள்ள கள நிலைவரத்தின் படி அரசாங்கத்தால் பெரும்பான்மையான ஆசனங்களை பெற முடியாத போதும் அதிகமான ஆசனங்களை அரசாங்கக்கட்சியே பெறும். எமது கணிப்பின் படி 13 அல்லது 14 பெறலாம். இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அமைச்சுப்பதவிகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைக்கு முட்டுக்கொடுக்காதிருக்குமா என்று முஸ்லிம்களிடம் கேட்கின்றோம்.  பள்ளிவாயல்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நாம் வாக்களிக்கப்போகிறோமா அல்லது ஜெய்க்கா போன்ற நிறுவனங்களின் தரகர்களாக கிழக்கில் இயங்கப்போகும் இரண்டொரு அமைச்சர்களைப்பெற்று அரசாங்கத்தின் கையில் மீண்டும் கிழக்கை ஒப்படைத்து விட்டு இலங்கை முஸ்லிம்களை இருட்டில் தள்ளப்போகிறோமா? இவ்வாறு அரசாங்கத்தின் சொகுசுக்கு அடிமைப்பட்ட நிலையில் எதிர்காலத்திலும் பள்ளி வாயல்கள் மீது தாக்குதல் தொடருமாயின் அரசை எதிர்க்க முடியுமா? ஏன்பது பற்றி ஏன் முஸ்லிம்கள சிந்திக்க மறுக்கிறார்கள்.
சிலர் நமதூருக்கு ஒரு உறுப்பினர் வேண்டும் என்கிறார்கள். நமதூருக்கு ஒரு உறுப்பினர் பெற்றுவிட்டால் முஸ்லிம்களின் பிரச்சினைக்கு அது தீர்வாகுமா? கடந்த காலங்களிலும் நமதூர்களுக்கு பிதிநிதிகள் இருந்தார்கள்தானே. இவர்களால் சமூகம் பெற்ற நன்மை என்ன? அரசுக்குப்பாடம் படிப்பிக்க வேண்டும் என்று  ஒரு புறமும் நமதூருக்கு உறுப்பினர் வேண்டும் என இன்னொரு புறமும் கூறுவதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் கொள்கை தெளிவற்ற நிலையில் இருக்கிறார்கள்.
ஆகவேதான் முஸ்லிம்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும். நமது புனிதஸ்தலங்களை தாக்கியோரில் ஒருவரைக்கூட கைது செய்யாமல் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோரை நாம் எதிர்க்கின்றோம் என்ற செய்தியை நாம் சொல்வதாயின் அரசாங்கத்தின் வெற்றிலை சின்னத்துக்கும் தமது சுயநலனுக்காக அரசுக்கு முட்டு கொடுக்கும் முஸ்லிம் காங்கிரசின் மரத்துக்கும் நாம் வாக்களிக்க முடியாது. இதில் முஸ்லிம்கள் தெளிவு பெறவில்லையாயின் பாரிய கைசேதத்தை அனுபவிக்க வேண்டிவரும் என்று எச்சரிக்கின்றோம் என முபாறக் மௌலவி தெரிவித்தாh

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar