BREAKING NEWS

தனிக்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக்கட்சியே முதன்மையான கட்சி என்பதனால் கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது தமிழ் பேசும் மக்கள் ஒன்றினைந்து அக்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்


நமது மதச்சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை உலகறியச்செய்ய வேண்டுமாயின் மக்கள் வாக்குகள் அதிகம் உள்ள தனிக்கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக்கட்சியே முதன்மையான கட்சி என்பதனால் கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் போது தமிழ் பேசும் மக்கள் ஒன்றினைந்து அக்கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

ஐ தே கின் கல்முனை வேட்பாளர் ஸறூக் காரியப்பரை ஆதரித்து கல்முனையில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாம் பல காலமாக அரசாங்கத்தை ஆதரித்து வந்தோம். இந்த ஊரே அணி திரண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நின்ற போது நாம் அவருக்கு ஆதரவாக நின்றோம். அப்போது நாம் மஹிந்தவிடம் பணம் வாங்கிக்கொண்டு ஆதரவளிப்பதாக சொன்னவர்கள் இப்போது ரணிலிடம் பணம் வாங்கி விட்டோம் என சொல்கிறர்கள். சமூகத்தை ஒட்டுமொத்தமாக பல கோடிகளுக்கு விற்று பழகி விட்டவர்கள் இப்படித்தான் மற்றவர்களையும் நினைப்பார்கள். நாம் எமது சொந்தப்பணத்தை செலவு செய்தே மஹிந்தவுக்கும் ஆதரவளித்தோம் இப்போது ஐ தே கவுக்கும் ஆதரவளிக்கிறோம்.
இந்த நிலையில்தான் தம்புள்ள சம்பவம் நடைபெற்;றது. இது காலவரை இப்படியொரு சம்பவம் நடக்காத நிலையில் மேற்படி சம்பவத்தை நாம் பகிரங்கமாக கண்டித்தோம். ஆனால் அரசாங்கத்தின் அசமந்தம் காரணமாக மீண்டும் தெஹிவளை பள்ளிவாயலுக்கும் கல் வீசப்பட்டது. இதனை எறிந்தவர்களை கைது செய்யும்படி நாம் அரசாங்கத்திடம் கோரிய போது இனந்தெரியாதவர்கள் என எமக்கு கூறப்பட்டது. அவ்வாறெனில் அவர்கள் யார் என்பதை தெளிவு படுத்தும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளனவே என்ற போது அதற்கு பதில் தராமல் இது ஐ தே கட்சி பிக்குமாரின் சதி என சமாளித்தார்கள். அப்படி ஐ தே க பிக்குமாரின் சதி என்றால் அவாகளை மிக இலகுவாக கைது செய்ய முடியுமே என்றேன்.  அதற்கு பதில் கிடைக்காத நிலையில்தான் மனச்சாட்சியுள்ள ஒரு முஸ்லிம் இந்த அரசுக்கு ஆதரவளிக்க மாட்டான் என்பதை உணர்ந்து நாம் அரசியிலிருந்து வெளியேறினோம். பின்னர் ஐ தே க தலைமயிடமிருந்து எமக்கு அழைப்பு வந்தது.
இந்த நாட்டை பொறுத்த வரை மக்கள் வாக்குகள் அதிகம் உள்ள தனிக்கட்சி என்ற வகையில் ஐ தே கவே முதன்மையாக உள்ளது. அரசாங்க கட்சியான ஐ ம சுதந்திர முன்னணி கூட ஒரு கூட்டுக்கட்சியாகும். அந்த வகையில் முஸ்லிம்களின் மத சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை கிழக்கு மாகாண சபை தேர்ல் மூலம் நாம் நாட்டுக்கும் உலகுக்கும் தெரியப்படுத்த வேண்டுமாயின் எதிர் கட்சியான ஐ தே கவுக்கு வாக்களிக்கச்செய்வதன் மூலமே முடியும் என்பதை உணர்ந்து உலமா கட்சி இத்தேர்தலில் ஐ தே கவை ஆதரித்து செயற்படுகிறது.
இந்த ஊரைப்பொறுத்த வரை நாற்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டோரில் 90 வீதமானோர் ஒரு காலத்தில் ஐ தே க ஆதரவாளர்களாக இருந்தவர்கள்தான். பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் துரோகத்தனம் காரணமாக  ஐ தே க இம்மாவட்டத்தில் மரணிக்கச்செய்யப்பட்டது. இன்று உலமா கட்சி ஐ தே கவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அக்கட்சி மீண்டும் உயிர் பெற்று வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர். ஆத்தகைய கட்சியை நாம் மீண்டும் வளர்த்தெடுக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நாங்கள் இந்தத்தேர்தலில் ஐ தே கவில் போட்டியிடும் ஸறூக் காரியப்பர் போன்ற படித்தவர்களை ஆதரிப்பதன் மூலம் இரு முஸ்லிம் பிரதிநிதிகளை அம்பாரை மாவட்டத்தில் பெற் முடியும். இவ்வாறு அனைத்து மவட்டங்களிலும் வாழும் முஸ்லிம்களும் தமிழர்களும்  ஒன்றிணைந்தால் கிழக்கு மாகாண சபையில் பத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை பெற்று ஆட்சியை தீர்மாணிக்க முடியும்.
ஆகவே நமது மதம்தான் நமக்கு முதலாவதாகும். அத்தகைய மத சுதந்திரத்துக்கு தடை ஏற்பட்டபின் வெற்றிலை என்ன மரமென்ன அனைத்தையும் தூக்கி வீச வேண்டும். இத்தனை சம்பவங்களுக்கு பிறகும் பதவிக்கு சோரம் போன ஹக்கீம் அதாவுள்ளா போன்றோரை ஓரங்கட்டி விட்டு  நமது நிiயை உலகறியச்செய்ய வேண்டுமாயின் இந்தத்தேர்தலில் நாம் யானைச்சின்னத்துக்கும் எமது முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும் என முபாறக் மௌலவி கூறினார். 

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar