BREAKING NEWS

இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்:


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கவனத்துக்கு:

இலங்கை முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகளும்:

1. பள்ளிவாயல்கள் மீதான அச்சுறுத்தல்கள். இது விடயத்தில் பிக்குகளோ, பொது மக்களோ எக்காரணம் கொண்டும் தலையிடக்கூடாது என்பதை அரசாங்கம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஒரு பள்ளிவாயல் சட்டப+ர்வமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது எனக்கண்டால் அதனை பொலிசுக்கு அறிவித்து
நீதி மன்றத்தின் மூலம் அனுக வேண்டுமே தவிர பிக்குகள், பொது மக்கள் பள்ளிவாயலை தாக்க முற்படக்கூடாது. இதனை மீறுவோரை பாரபட்சமின்றி அரசாங்கம் கைது செய்வதான வாக்குறுதி தரப்பட வேண்டும்.

2. காணி அபகரிப்புக்கள்: குறிப்பாக பொத்துவில், ஒலுவில், மன்னார் போன்ற பிரதேச காணிகள். இது விடயத்திலும் நீதி மன்றமே தலையிட வேண்டுமே தவிர இராணுவமோ, அரச அதிகாரிகளோ தலையிடக்கூடாது. அது மட்டுமல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்ட முஸ்லிம்களின் அனைத்து காணிகளும் திருப்பி வழங்கப்பட வேண்டும்.

3. சிங்கள பொது மக்கள் வாழாத தமிழ் பேசும் மக்களின் பிரதேசத்தில் புத்தர் சிலைகள் பகிரங்கமாக வைக்கக்கூடாது.

4. முஸ்லிம் பாடசாலைகளுக்கான வளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

5. மௌலவி ஆசிரிய நியமனம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இதற்கான போட்டிப்பரீட்சை என்பது தமிலிலும் அறபு மொழியிலும் சமயம் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

6. கல்முனை கரையோர மாவட்டம் என்ற புதிய தேர்தல் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதற்குள் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தொகுதிகள் உள்ளடக்கப்பட்டு அவற்றுக்கென தனியான கச்சேரி உருவாக்கப்பட வேண்டும்.

7. இன விகிதாசாரப்படி அரச நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.

8. முஸ்லிம் சமய கலாச்சாரத்துக்கென தனியான அமைச்சு உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவரே குறிப்பாக கிழக்கை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.

இவற்றை முன் வைத்து பேரம் பேசப்பட்டு வெல்ல முடியும் என்றால் அதுதான் உண்மையான வெற்றி. இதனை பெற்றுத்தருவோருடன் நாம் நிபந்தனை இன்றி இணைந்து செயற்படுவோம்.
-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar