BREAKING NEWS

இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?


ஒரு தடவை நாம் தெரிவு செய்தோர் பிரதேசத்துக்கும், சமூகத்துக்கும் எந்த நன்மையையும் செய்யாத நிலையில் மீண்டும் மீண்டும் அவர்களை தெரிவு செய்து விட்டு ஒன்றுமே செய்கிறார்களில்லையே என ஒப்பாரி வைப்பது ஏன் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஸறூக் காரியப்பரை ஆதரித்து கல்முனை பிரதான வீதியில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இக்கேள்வியை எழுப்;பினார். தொடர்ந்து அவர் குறிப்பிட்டதாவது,
இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்? நமது அபிவிருத்திகளை பெறவா? உரிமைகளை பெறவா? அல்லது பள்ளிவாயல்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவா? அபிவிருத்திகளை பெற்றுத்தரத்தான் நாம் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளோம். அவர்களில் பலர் உதவாக்கரைகளாக இருப்பதற்கு திரும்பத்திரும்ப அவர்களுக்கே வாக்களிக்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். உரிமைகளை பெறுவதாயின் அரசின் பங்காளியான மரத்துக்கு வாக்களிப்பதனால் முடியாது. முரத்துகன்கு எமது மக்கள் பலமுறை வாக்களித்து ஏமாந்ததுதான் மிச்சம். அதே போல் பள்ளிவாயல் தாக்குதலுக்கெதிராக வாக்களிப்பதாயின் வெற்றிலைக்கோ அமைச்சரவையில் ஒட்டிக்கொண்டிருக்கும் மரத்துக்கோ வாக்களிப்பதால் நமது எதிர்ப்பை காட்டியதாக ஒரு போதும் முடியாது.
இந்த நிலையில் நாம் இந்த தேர்தலில் எதிர் கட்சிக்கு வாக்களித்தால் அபிவிருத்தியும் உரிமையும் தானாக நம்மைத்தேடிவரும். ஏனென்றால் முஸ்லிம்கள் இந்த அரசையும், அதன் தரகரான முஸ்லிம் காங்கிரசையும் நிராகரித்துவிட்டர்கள் என்ற செய்தி அரசாங்கத்தை கதிகலங்கச்செய்து உங்களது பிரச்சினை என்ன என அப்போதுதான் இந்தப்பகுதியை திரும்பிப்பார்ப்பார்கள். இன்று வட மாகாண தமிழ் மக்கள் அரசையும், அதன் தரகர்களையும் நிராகரிப்பதால் அங்கு பல வீதிகள் அபிவிருத்தி பெறுகின்றன, எப்படியாவது தமிழ் மக்களின் மனதை வெல்ல வேண்டும் என அரசு நினைக்கிறது. இதுதான் யதார்த்த அரசியல்.
நமது உறுப்பினர்கள் எதுவும் செய்யாமலிருக்கிறார்கள் என தொடர்ந்து ஏசவதில் பிரயோஜனமில்லை. உங்களிடம் ஒருவர் வேலை செய்கின்றார் என்றால் அவர் தொழில் செய்யாவிட்டாலும் மாதா மாதம் சம்பளம் கொடுப்பீர்கள் என்றால் அவர் ஒழுங்காக வேலை செய்வாரா? இல்லை. இவ்வாறுதான் நமது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதுவுமே செய்யாமலேயே நமக்கு பிடித்த கட்சியில் வந்து நம்மை ஏமாற்றினால் கொஞ்சமும் சிந்தனையற்று அவர்களுக்கு வாக்களித்து விட்டு  பின்னர் ஒப்பாரி வைப்பதன் மூலம் நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்கிறோம்.
ஆகவேதான் கூறுகிறோம் இந்த தேர்தலில் நாம் யானைக்கு வாக்களிப்பதன் மூலமே அரசாங்கம் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றாமல் தடுப்பதோடு நமது அபிவிருத்திகளையும் உரிமைகளையும் அரசிடமிருந்து பெறுவதற்கான திருப்பத்தை ஏற்படுத்த  முடியும் என்ற சிந்தனையை நாம் உங்களிடம் விடுக்கின்றோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar