BREAKING NEWS

எந்த சவாலையும் சந்திக்க நான் என்றும் தயார. -றிசாத் பதியுதீன்



-    இர்ஷாத் றஹ்மத்துல்லா -                    
இந்த நாட்டில்வாழும் முஸ்லிம் சமூகம் அதனது விடுதலை ஊரை நோக்கி பயணிக்கும் பாதையில் வரும் தடைகளை அகற்றும் எனது பணியில் வரும் எந்த சவாலையும் சந்திக்க நான் என்றும் தயாராக இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மூதுரில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வேட்பளார்களான டாக்டர் ஹில்மி மஹ்ரூப்,அப்துல் ரஸ்ஸாக் ஆகியோரை ஆதரித்து மூதுர் பிரதேச சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் ஜெஸ்ரின் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில்  உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது
இன்று எமது சமூகத்தினை கூறுபோட்டு அதன் மூலம் அரசியல் லாபம் அடைய சில சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதை காண முடிகின்றது.இதனை செய்ய வேண்டாம் என அவர்களிடம் கேட்கின்றோம்.எமது நாட்டில் இனங்களுக்கிடையில் உறவினை ஏற்படுத்தும் பாதையில் ஜனாதிபதி தலைமையிலான அரசு பயணித்துக் கொண்டிருக்கின்றது.அந்த பயணத்தில் நாமும் இணைவது தான் காலத்தின் தேவையாகும்,ஆனால் இன்று அதனைவிடுத்து பிளவுகளையும்,இன முறுகல்களையும் தோற்றுவிக்க சில சக்திகள் பாடுபடுகின்றன.அதற்காக இந்த தேர்தலை ஒரு சாதனமாக பயன்படுத்துகினறனர்.அதற்கு எமது மக்கள் இடம் கொடுக்கக் கூடாது.
எமது மக்களின் விமோசனத்திற்கு  எம்மால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு இன ரீதியான பார்வை செலுத்தப்படுகின்றது.முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணியானது,சகலருடனும் ஜக்கியத்துடனும்,நெருக்கத்துடனும் வாழ வேண்டும் என்பதாகவே இருந்து வந்துள்ளது.அதற்காக அன்று முதல் இன்று வரை எண்ணிலடங்காத தியாகங்களை செய்துவந்துள்ளதை நினைவுபடுத்த  வேண்டியுள்ளது.
எமது நாட்டை துண்டாட வேண்டும் என்பதில் தீவிர பிரிவினை கோறும் சக்திகள் செயற்பட்ட போதெல்லாம்,இந்த நாடு பிளவுபடக் கூடாது ,இங்குள்ள சகல சமூகங்களும் தமது அடையாளங்களை


பிரகடனப்படுத்தி யாருக்கும் எவர்களும் அடிமைகளல்லர் என்ற கோட்பாட்டுக்கைமய வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் சமூகமாகவே இருந்து வந்துள்ளதை நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்று கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் எமது மக்களுக்காக என்ன தண்டனை வழங்கப்பட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார்.
திருகோணமலைக்கு வந்து தமிழ் கட்சிகள்,அதே போல சில முஸ்லிம் கட்சிகளும் அதனது வேட்பாளர்களும்  எதையெல்லாம் கூறுகின்றனர்.அவர்கள் கூறுவதில் எந்த உண்மையுமில்லை,தேர்தல் காலத்தில் மட்டும் தோன்றி மறைபவர்கள் தான் அவர்கள்.எமது தரப்பில் நியாயாங்களும் ,உண்மைகளும் இருக்கின்றது.அதனல் தான் தைரியமாக மக்களுக்கான பணியினை ஆற்றுகின்றோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar