BREAKING NEWS

அரசுக்கு மு. கா கிழக்கில் முட்டுக்கொடுக்குமாயின் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் செய்கின்ற துரோகமாகும்.


கிழக்கு மாகாண தேர்தலில் பாரிய வெற்றியை எதிர் பார்த்த முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியையே அடைந்துள்ளதுடன் எமது கோரிக்கையை ஏற்று முஸ்லிம் கட்சிகள் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் கிழக்கில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர் என்;பதை உலகக்கு நிரூபித்திருக்க முடியும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களிடம் தேர்தல் முடிவு பற்றி கேட்கப்பட்ட போதே இவ்வாறு அவர் கூறினார். அவர் தொடர்ந்து கூறியதாவது,


இந்தத்தேர்தலில் ஆளுந் தரப்புக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும் 13 அல்லது 14 உறுப்பினர்களே கிடைக்கும் என நாம் பகிரங்கமாக தெரிவித்திருந்தோம்.. இதன் மூலம் கிழக்கு மாகாண சபையின் தன்னாதிக்கத்தை அரசு இழந்துள்ளது. அதே வேளை பள்ளிவாயல்களை மையமாக வைத்து அரசுக்கெதிராக பேசி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அதே அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்கும் நிலையிலேயே அதற்குரிய உறுப்பினர் எண்ணக்கை கிடைத்துள்ளது. அவ்வாறு அரசுக்கு மு. கா கிழக்கில் முட்டுக்கொடுக்குமாயின் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் செய்கின்ற துரோகமாகும்.

இத்தகைய துரோகத்தையே மு. கா தலைவர் ஹக்கீம் செய்வார் என்பதை நாம் தேர்தல் காலத்தில் சமூகத்துக்கு எடுத்துக்கூறினோம்.  ஆனாலும் பலர் இதனை புரிந்து கொள்ளவில்லை. இன்று திரிசங்கு நிலையில் அக்கட்சி உள்ளது. அத்துடன் முஸ்லிம் மக்களின் வாக்களிப்பு வீதம் குறைந்தமைக்கு பிரதான காரணம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டே தங்களை ஏமாற்றுகிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டமையாகும். அதனால் வாக்களிப்பில் ஆர்வம் கொள்ளவில்லை.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு என தேர்தலில் பொது சின்னத்தில் குதிப்பதன் மூலம் முஸ்லிம்களே கிழக்கில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பதையும் முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதில் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும் என்பதையும் தெரிவித்தோம். ஆனால் இது விடயத்தில் மு. கா துரோகம் செய்து விட்டது.

இன்றுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு முட்டுக்கொடுக்குமாயின் அது முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்பதை உலமா கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar