BREAKING NEWS

ஹாஜிகள் ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து மக்கா சென்று மினாவில் தரிக்காமல் தமது ஹஜ்ஜையும், பணத்தையும் வீணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதானது உண்மையில் மிகப்பெரிய துரதிஷ்டமாகும்.

இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்றுள்ள ஹாஜிகளுக்கு மினாவில் தங்குமிடம் ஒதுக்காமைக்கு முகவர்களும் ஹாஜிகள்; விடயத்தில் அக்கறை செலுத்தாத இலங்கை அரசின் நிர்வாக குறைபாடுமே காரணமாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. மினாவில் ஹாஜிகளுக்கு இடங்கிடைக்கவில்லை என்பது பற்றிய உலமா கட்சியின் கருத்தை ஊடகவியலார் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் இவ்வாறு தெரிவித்தர். அவர் மேலும் கூறியதாவது


ஹஜ் விடயத்தில் பல பிரச்சினைகள் எதிர் நோக்குவதற்கு காரணம் அரசாங்கத்தின் நிர்வாகத்திறமையின்மையும் ஒரு சில முகவர்களின் ஏகபோக உரிமையுமே  என்பதை நாம் முன்னரும் சுட்டிக்காட்டியுள்ளோம். ஹஜ்ஜுக்காக செல்லும் ஒருவர் அரபாவில் இருந்து வந்ததும் கட்டாயம் அவர் மினாவில் தங்க வேண்டும். அவ்வாறு தங்காவிடில் அவரது ஹஜ் செல்லுபடியற்றதாகி விடும். எமது ஹாஜிகள் ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக செலவு செய்து மக்கா சென்று மினாவில் தரிக்காமல் தமது ஹஜ்ஜையும், பணத்தையும் வீணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதானது உண்மையில் மிகப்பெரிய துரதிஷ்டமாகும்.

ஹஜ் முகவர்களாக இருப்போரில் பலருக்கு மார்க்கம் என்றால் என்ன ஹஜ்ஜின் கடமைகள் எவை என்பது கூட தெரியாத நிலையில் உள்ளார்கள் என்பதையே இச்செயல் காட்டுகிறது. இப்படியானவர்களுக்கு அனுமதி பத்திரம் கொடுத்தவர்கள் சமூகத்துக்கு கட்டாயம் பதில் சொல்லியாக வேண்டும்.

இலங்கை ஹாஜிகளின் ஹஜ்ஜை முகவர்கள் விளையாட்டாக எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பது வெளிச்சமாகியுள்ளது. இறைவனுக்காக என ஹஜ்ஜுக்கு அழைத்துச்செல்வோர் அரிதாகி சகலதும் பொருள் மயப்படுத்தப’பட்டு விட்டதால் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.

மினாவில் தங்குமிடத்துக்கான பணத்தை முகவர்கள் ஹாஜிகளிடம் வசூல் செய்திருந்தும் அதனை செலுத்தாததே இதற்கு பிரதான காரணம் என்பது உண்மையாக இருந்த போதிலும் இத்தகைய  பகற்கொள்ளைக்கு ஹஜ்ஜுக்கு பொறுப்பான அரச நிர்வாகிகளும் தமது பொறுப்புக்கூறலிலிருந்து விலகி விட முடியாது. ஆகவே ஹாஜிகள் மினாவில் தங்குவதற்கான இடங்களை உடனடியாக ஒதுக்கித்தர வெண்டும் என உலமா கட்சி கோருவதோடு இது விடயம் தொல்வியடையுமானால் ஹாஜிகளின் பதுவாக்களை (எதிர் பிரார்த்தனைகளை) சம்பாதிக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar