BREAKING NEWS

கரிமலைய+ற்று பள்ளிவாயலை மீட்க முடியவில்லை என்பது முஸ்லிம் அரசியலின் பதவிக்காக சோரம் போன அடிமைத்தனத்தையே காட்டுகிறது . - உலமா கட்சி


கிழக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பில் உள்ள இருபத்தியொரு உறுப்பினரில் பதினான்கு பேர் முஸ்லிம்களாக இருந்தும் திருகோணமலை கரிமலைய+ற்று பள்ளிவாயலை மீட்க முடியவில்லை என்பது முஸ்லிம் அரசியலின் பதவிக்காக சோரம் போன அடிமைத்தனத்தையே காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

கல்முனையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது

கிழக்கு மாகாண ஆட்சியதிகாரத்தில் முஸ்லிம் உறுப்பினர்களையே அதிகமாகக் கொண்ட கிழக்கு மாகாண சபை, கரிமலைய+ற்று பள்ளிவாயலை மீளப்பெறுவதற்கான தீர்மானத்தை அண்மையில் நிறைவேற்றியிருப்பதை பார்க்கும் போது மிகப்பெரும் அரசியல் கோமாளித்தனம் நிறைவேறியிருப்பதாகவே தெரிகிறது.

இந்த சபையில் இருக்கும் உறுப்பினர்களில் ஏழு பேர் அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கட்சியினர். மூவர் அமைச்சர் அதாவுள்ளாவின் கட்சியினர். மேலும் மூவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியினர். ஒருவர் ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்தவர். அப்படியிருந்தும் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டுள்ள பள்ளிவாயலை மீட்க அரசுக்கு முட்டுக்கொடுக்கும், அரசின் அமைச்சர்களாக பவனி வரும் பங்காளிக்கட்சிகளால் முடியவில்லை என்றால் இதனை விட பதவிக்காய்  சோரம் போன அரசியல் உலகில் இருக்க முடியாது. இத்தனைக்கும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சர், மூன்று பேர் அமைச்சர்கள். இருவர் உரிமைக்குரல் பேசி பதவிக்கு வந்தவர்கள்.  
கடந்த தேர்தல் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வருடன் இணைந்து ஒரு வாரத்தில் இப்பள்ளியை மீட்டுத்தருவேன் என இன்றைய முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதே போல் பள்ளிவாயல்களை காப்பாற்ற  தமக்கு வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மக்களை ஏமாற்றியது. அதே போல் அரசுடன் ஒட்டியிருந்தால்தான் இவைகளை மீட்க முடியும் என அதாவுள்ளாவும், ரிசாதும்  தம்பாட்டுக்கு ஏமாற்றினர்.  

இத்தகைய ஏமாற்றுக்களுக்கு மயங்கி தமது அறிவை  இவர்களிடம்; அடமானம் வைத்த முஸ்லிம் சமூகம் இப்போது மௌனமாய் அழுது கொண்டிருக்கிறது.  மாகாண சபை அமைக்கப்பட்டு இரண்டு மாதம் கடந்தும் ஆளுந்தரப்பாக இருந்து கொண்டே பள்ளிவாயலை மீட்க வக்கில்லாமல்  எதிர்க்கட்சி போன்று இவர்கள் தீர்மானம் நிறைவேற்றியள்ளார்கள். இதைவிட தாங்கள் அரசியல் பதவிக்காய் சோரம் போன அரசியல்வாதிகள் என தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் நிச்சயம் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar