BREAKING NEWS

பௌத்த மதமே அரசாங்கத்தின் மதம் என்பதை நீக்கி அனைத்து மதங்களும் அரச மதமாக பிரகடனப்படுத்த வேண்டும்

அரசமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தை நீகடகி அனைவருக்கும் சமவுரிமை என்ற தீர்வை கொண்டு வர வேண்டும் என கூறும் தேசிய பிக்குகள் முன்னணி பௌத்த மதமே அரசாங்கத்தின் மதம் என்பதை நீக்கி அனைத்து மதங்களும் அரச மதமாக பிரகடனப்படுத்த வேண்டும் என அரசுக்கு கூறுவார்களா என முஸ்லிம் உலமா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இது பற்றி அக்கட்சியன் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,


13வது திருத்தச்சட்டம் என்பது இலங்கை இந்திய ஒப்பந்த்தின் மூலமே கொண்டு வரப்பட்டது. அதன் போது முஸ்லிம்கள் பற்றி அன்றைய அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது மிகப்பெரிய குறையாகும். அன்று இதனை எதிர்த்து ஒரு முஸ்லிதம் பாராளுமன்ற உறுப்பினராவது அரசாங்கத்திலிருந்து விலகவில்லை. அனைவரும் பதவிகளுக்காக பெட்டிப்பாம்பாய் அடங்கி விட்டனர். ஒருவராவது பதவி விலகியிருந்தால் இன்று அது பற்றி முஸ்லிம் சமூகம் பெருமைப்பட்டிருக்கும். இந்த நிலையை கண்டித்து உருவான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பதவிக்கு ஆடும் அதே பெட்டிப்பாம்பின் நிலையில் உள்ளது.

13வது திருத்தச்சட்டம் என்பது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்கவில்லை. மாறாக பிரதேச மக்களுக்கு சில சலுகைகளை மட்டுடேம வழங்கியது. இச்சட்டத்தை நீக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. முhறாக அதனை வைத்துக்கொண்டே நீண்ட கால தீர்வை நோக்கி செல்ல வேண்டும்.

தேசிய பிக்குகள் முன்னணி சொல்வது போல் அனைத்து இனங்களுக்கும் சமவுரிமை என்பது அரசமைப்புச்சட்டத்தில் ஏற்கனவே உள்ளது. இதனை பயன்படுத்தியே சுனாமியால் பரிதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கென சஊதி அரசால் கட்டப்பட்ட வீடுகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. ஆக அனைவருக்கும் சமவுரிமை என்பதன் மூலமும் சிறுபான்மை இனங்களே வஞ்சிக்கப்படுகின்றன.

அவ்வாறு அனைவருக்கும் சமவுரிமை என்பதை அமுலாக்குவதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு என தேசிய பிக்கு முன்னணி கருதுமாயின் பௌத்த மதமே அரசாங்கத்தின் பிரதான மதம் என்பதை நீக்கி அனைத்து மதங்களும் சம அந்தஸ்த்துடனான அரசாங்கத்தின் மதமாக கொள்ளப்பட வேண்டும் என இந்த முன்னணி அரசைக்கோருமா என கேட்கிறோம்.

இன்று நாட்டில் பௌத்த சாசனத்துக்கென்றே தனியான அமைச்சு உள்ளது. ஏனைய மதங்களுக்கு எந்தவொரு அமைச்சோ பிரதி அமைச்சோ கூட இல்லை. இந்த நிலையைக்கூட நிவர்த்தி செய்யாமல் அனைத்து இனங்களுக்கும் சமவுரிமை வென்பது வெறும் கண்துடைப்புக்குரிய வார்த்தையாகும்.

எம்மைப்பொறுத்த வரை 13வது திருத்தச்சட்டம் என்பது அப்படியே இருக்கும் நிலையில் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை காணும் வகையில் மூவின தரப்பும் கொண்ட உண்மையான, நேர்மையான பேசு;சுவார்த்தைகள் மூலம் வெளிநாடொன்றின் மத்தியஸ்தம் மூலம் தீர்வை நோக்கி பயணமாக வேண்டும். அதன் போது ஓரினத்தின் மீது இன்னொரு இனம் இனரீதியாக ஆதிக்கம் செலுத்தாத வகையிலான தீர்வு பற்றி ஆராயப்பட வேண்டுமென்பதே உலமா கட்சியின் நிலைப்பாடாகும்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar