BREAKING NEWS

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பொன்விழா நிகழ்வு


மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் 2013.03.31 ஞாயிற்றுக்கிழமை பாடசாலை ஆராதனை மண்டபத்தில் அதிபர் யூ.என்.ஏ.கபூர் அவர்களின் தலைமையில் மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஜீப் அப்துல் மஜீது அவர்களும், கௌரவ அதிதிகளாக மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க, மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
சிறப்பு அதிதிகளாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.என்.ஏ.ஏ.புஸ்பகுமார, மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் எம்.ரி.ஏ.நிசாம், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஏ.விஜயானந்தமூர்த்தி, மூதூர் பிரதேச செயலாளர் திரு.என்.பிரதீபன், மூதூர் பிரதேச சபைத்தலைவர் ஜனாப் எம்.ஏ.எம்.ஹரீஸ் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் இவ்வைபவத்தில் ஏராளமான பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் ஊர்ப்பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழாவின்போது பாடசாலை ஸ்தாபகர்கள், முன்னாள் அதிபர்கள், இப்பாடசாலையில் கற்றுக்கொடுத்த ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும் இவ்வைபவத்தில் 150 பக்கங்கள் கொண்ட இப்பாடசாலையின் வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய  ‘அல்-ஹிலால்’ எனும் சிறப்பு மலரொன்றும் வெளியிடப்படவுள்ளது. இப்பாடாலை 1961.01.02 ஆந்திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar