BREAKING NEWS

முஸ்லிம் அமைச்சர்களே ஒன்றுபடுங்கள் : அமீர் அலி

http://kattankudi.files.wordpress.com/2012/01/mss-ameer-ali.jpgமுஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி அமைச்சர்களான றஊப் ஹக்கீம், அதாவுல்லாஹ், றிசாட் பதியுதீன் ஆகிய மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களும் ஒன்றுபடுமாறு இம் மூவருக்கும் வேண்டுகோள்  விடுக்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள்  அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள் குடியேற்ற கிராமமான றூகம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அபிவிருத்தி விழாவில் உரையாற்றும் போதே இந்த வேண்டுகோளை மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி விடுத்துள்ளார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அமீர்அலி இன்று முஸ்லிம் சமூகம் பல் வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்றது.
முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளை செய்வதற்கு கூட அச்சப்படும் ஒரு அச்சம் நிறைந்த சூழ் நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ஷரிஆ கொச்சைப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்னும் அபிவிருத்தி என்றும் கொந்தராத்து என்றும் பேசிக்கொண்டிருக்கும் நேரமல்ல இது.
முஸ்லிம்களின் ஈமானையும், ஷரீஆவையும் பாதுகாக்கம் நேரமாகும். முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை அச்சமின்றி செய்வதற்கு சந்தப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நேரமாகும்.
முஸ்லிம்களின் நன்மை கருதி அனைத்து முஸ்லம் அரசியல் தலைவர்களும் இதில் ஒன்று பட வேண்டும்;.
இந்த அடிப்படையில் அமைச்சர்களான றஊப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகிய மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் ஒன்று பட்டு தற்போது முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கையாள முனையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இன்னும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் ஒன்று படாமல் விட்டால் எதிர்காலத்தில் நாங்கள் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும்.
இந்த மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தமக்குள் இருக்கிள்ற அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி ஒற்றுமை பட்டு ஒன்று சேர்ந்து முஸ்லிம்களின் நலன் குறித்து ஒரே மேசையில் இருந்து பேசுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இந்த மூன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம்களின் நலன் கருதி ஒன்றுபட்டால் அது இந்த நாட்டிலுள்ள இன வாதிகளுக்கு சொல்லும் பெரிய செய்தியாக மாறும் ஏன அமீர் அலி மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar