தற்போதைய நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கூட்டப்பட்ட முஸ்லிம்
காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று அதிகாலை ஞாயிற்றுக்கிழமை வரை
தொடர்ந்துள்ள நிலையில் உறுதிமிக்க தீர்மானம் எதுவுமின்றி அக்கூட்டம்
நிறைவடைந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த உயர்பீடக் கூட்டத்தில் அக்கட்சியை செர்ந்த 5
எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. அவர்களில் 3 பேர் தாம் உயர்பீடக் கூட்டத்தில்
பங்குகொள்ளாமைக்கான காரணத்தை கட்சியின் செயலாளருக்கு அறிவித்துள்ளனர்.