BREAKING NEWS

அபு தாலிப் நரகவாதியா?


அபு தாலிப் நரகவாதியா? என்றொரு புத்தகம் காணக்கிடைத்தது.
பார்த்தவுடனே இது ஷீயாக்களின் ஊடுருவல் என்பது தெளிவாக தெரிந்தது. அஹ்லுல் பைத் நிறுவனத்தால் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
அப+தாலிப் நரகவாதி என நபி (ஸல்) அவர்களால் சொல்லப்பட்டு புகாரியில் பதிவாகியுள்ள இரண்டு ஹதீத்களும் இட்டுக்கட்டப்பட்டவை, பொய்யானவை என இந்நூல் ஆசிரியர் அப்;துல் ரஸ்ஸாக் என்பவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் முஸ்லிம்களால் உயர்வாக கருதப்படும் புகாரியில் பொய்யான ஹதீத்கள் உள்ளன என கூறுகிறார்;. அபுதாலிப் நபிகளாரின் சாச்சா என்பதால் அவர் நபியுடன் பாசமாக பழகியதையும், நபிகளாருக்கு எதிரிகளால் ஆபத்து வரக்கூடாது என்பதிலும் நிறைய அக்கறை காட்டியதை வைத்து இப்படிப்பட்டவர் இஸ்லாத்தை ஏற்காமல் விட்டிருப்பாரா என நூலாசிரியர் தர்க்கிக்க்pறார். பாசம், அக்கறை வேறு , இஸ்லாத்தை ஏற்பது என்பது வேறு என்பதை இவர் புரியவில்லை. மகன் என்னதான் முரண்பட்ட கொள்கையில் இருப்பதாக தெரிந்தாலும் தந்தை தனது பாசத்தை விட மாட்டான். அதே போல் இஸ்லாம் சரியான மார்க்கம் என புரிந்து வைத்திருந்த அப+தாலிப் தன்மானச்சிக்கல் காரணமாக இஸ்லாத்தை ஏற்பதை தவிர்த்தவர் நபிகளார் மீது பாசம் இல்லாதவராக இருப்பாரா?
எத்தனையோ பலர் இஸ்லாம் சரியான மார்க்கம் என்று உள்ளத்தில் தெரிந்திருந்தாலும் ஊரென்ன பேசும் என்று அதனை ஏற்காமல் இருக்கிறார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். இது போன்ற நிலையில்தான் அப+தாலிப் இருந்தார்.
அபுதாலிப் இஸ்லாத்தை ஏற்றார் என்பதற்கான ஒரு ஹதீதையும் இந்நூலில் காணவில்லை. மாறாக சுற்றிவளைத்து தர்க்கிப்பதை மட்டுமே காணக்கிடைக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் நபிகளாரின் உறவினரான அஹ்லுல் பைத்கள் மீது பாசமாக இருப்பதனால் அபு தாலிபை முஸ்லிமாக காட்ட இந்த ஷீயா கூட்டம் முயற்சி எடுத்துள்ளது.
இந்நூலில் எக்கச்சக்கமான பிழைகளையும், முரண்பாடுகளையும் காணக்கூடியதாக உள்ளது. இஸ்லாத்தை பற்றி தெளிவில்லாதவர்களை மிக இலகுவாக வழி கெடுத்து விடக்கூடியதாக உள்ளது என்பதால் இந்த எச்சரிக்கையை நாம் விடுக்கிறோம்.
-முபாறக் அப்துல் மஜீத்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar